கலசம் (இதழ்)

கலசம் (About this soundஒலிப்பு ) இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1970களில் வெளிவந்த ஒரு பல்சுவை இதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் 16, 1972இல் வெளிவந்தது. முதல் இதழின் ஆசிரியர் தலைப்பில் இவ்விதழ் வெளிவருவது குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ‘கலசம் ஈழத்தில் இலக்கியம் வளர்க்க வரவில்லை. வாசகர்களுக்கு தேவையானவைகளை கொடுத்து அவர்களை வளர்க்கத்தான் வருகின்றது.’

தொடர்பு முகவரிதொகு

30C எவன்யு, கொழும்பு 03

உள்ளடக்கம்தொகு

இவ்விதழில் ஜனரஞ்சகத்தன்மை பேணக்கூடிய வகையில் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. நகைச்சுவைத் துணுக்குகள், சினிமாச் செய்திகள், விஞ்ஞானத் தகவல்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறு கட்டுரைகள் போன்றன இடம்பெற்றிருந்தன.

இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலசம்_(இதழ்)&oldid=2553954" இருந்து மீள்விக்கப்பட்டது