கலப்பாடு மாம்பழம்

கலப்பாடு என்பது மாம்பழங்களில் ஒரு வகையாகும். இம்மரம் ஆண்டு தோறும் சீரான, அதிக விளைச்சல் தரக்கூடியது. இது குட்டையாக வளரும் மத்திய பருவ இரகமாகும். இதன் பழங்கள் சிறியதாகவும், நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். நார் இல்லாமல் கெட்டியான சதைப்பற்றும், நல்ல சுவையும் மணமும் உடையது. மஞ்சள் ஆரஞ்சு கலந்த ஆறஞ்சு நிறசதைப்பற்றுக் கொண்டது.

கலப்பாடு மாம்பழங்கள்

உசாத்துணை தொகு

  • ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர், கிருட்டிணகிரி, தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்பாடு_மாம்பழம்&oldid=2040082" இலிருந்து மீள்விக்கப்பட்டது