க. கலாமோகன் (பி.1960) ஒரு தமிழ் எழுத்தாளர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.

இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.[1]

இலக்கியப் பங்களிப்பு

தொகு

கே.எல்.நேசமித்திரன் என்ற புனைபெயரிலும் எழுதியவர். புலம்பெயர முன்னர் கொழும்பில் பத்திரிகையாளராகப் பணியாற்றிவர். 1983 இல் இருந்து பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்.

பிரஞ்சுமொழியில் புலமையுடையவர். இவரின் சில கோட்டோவியங்கள் புகலிட இதழ்களில் வெளிவந்துள்ளன. எக்ஸில் சஞ்சிகையில் இவரின் பல கதைகள் வந்துள்ளன. அதே இதழில் பிரஞ்சுக் கவிதைகள் சிலவும் உள்ளன.

வெளிவந்த நூல்கள்

தொகு
  • ET DEMAIN (பிரஞ்சு மொழியிலான கவிதைத் தொகுப்பு)
  • நிஷ்டை (சிறுகதைகள்)1999, எக்ஸில் வெளியீடு.
  • வீடும் வீதியும் (நாடகநூல்)
  • ஜெயந்தீசன் கதைகள் (கதைகள்)2003, மித்ர வெளியீடு.

மேற்கோள்கள்

தொகு
  1. "புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.

2. [பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்/ - அனோஜன் பாலகிருஷ்ணன்]

3. [கலாமோகனின் கதைகள் திறனாய்வு -சு.குணேஸ்வரன் /]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாமோகன்&oldid=3548424" இலிருந்து மீள்விக்கப்பட்டது