கலாலி, வடோதரா

கலாலி (Kalali) இந்திய நகரமான வடோதராவிற்கு தென்மேற்கில் அமைந்துள்ள துணைநகரமாகும். விசுவாமித்திரி ஆற்றின் [1][2] கரையில், வடோதரா இரயில்வே நிலையத்திற்கு 5 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் முக்கியமாக இந்துக்களாக உள்ளனர். கலாலிக்கு அருகில் அகோடா, அட்லாதரா, பில், டால்சட், சபாத் போன்ற பகுதிகள் அருகிலுள்ள பிற நகரங்களாகும். ஒரு தொடக்கப்பள்ளி, சில தனியார் பள்ளிகள், தில்லி பொதுப் பள்ளி, குசராத்து பொதுப் பள்ளி, முதலிய கல்வி நிலையங்கள் இங்கு அமைந்துள்ளன. சிறீ சிராப் அறக்கட்டளை நிர்வகிக்கும் [3] சிறீ இராம கிருட்டிண பரமகம்சர் மருத்துவமனை ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. சுவாமிநாராயணன் சம்பிரதாயினைச் சேர்ந்த மறைந்த சிறீ கோபாலானந்து சுவாமி கலாலியில் சுவாமிநாராயணன் கோவிலைக் கட்டினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. https://pincode.net.in/gujarat/VADODARA/K/KALALI
  2. http://goo.gl/maps/llGFl
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-26. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாலி,_வடோதரா&oldid=3777122" இலிருந்து மீள்விக்கப்பட்டது