கலா கக்சா கும்பல்
கலா கக்சா கும்பல் (Kala Kaccha Gang) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் காணப்பட்ட ஏதோசில நபர்கள் ஒன்றுசேர்ந்து உருவான குற்றவியல் கும்பலைக் குறிக்கிறது. காலெ-கச்செவாலெ அல்லது காலெ கச்செ கும்பல் என்ற பெயர்களாலும் இக்கும்பல் அழைக்கப்பட்டது. வழிப்பறி கொள்ளையர்களும் ஆயுதமேந்திய கொள்ளையர்களும் இக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். மற்றவர்களின் பார்வையில் அகப்படாமல் தப்பிப்பதற்காக இவர்கள் காவலர் சீருடையை அணிந்து கொள்வார்கள். பிடிபட்டால் தப்பிப்பதற்கு ஏற்ப உடலில் மசகு எண்ணெயைப் பூசிக் கொள்வார்கள்.
இதைப்போன்ற பல கும்பல்கள் பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொதுவாக கிராமப்புறங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வாழும் குடும்பங்களே இவர்கள் இலக்காகும். சூறையாடுவதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட பலியாட்களை நோட்டம் பார்த்து உறுதி செய்து கொள்வது இவர்கள் வழக்கம் ஆகும். 2014 ஆம் ஆண்டு சூன் சூலை மாதத்தில் மொகாலி காவலர்கள், ஒர் ஆயுதந்தாங்கிய கொள்ளைக் கும்பலின் திட்டத்தை முறியடித்தனர். கைவிடப்பட்ட ஒரு தொழிசாலையைக் கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிட்டிருந்த வேளையில் கொள்ளையர்களில் 12 பேரை கைது செய்தனர்.
சம்பவங்கள்
தொகு- 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் இலத்தோவால் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மீது தாக்குதல் நிகழ்த்தினர். குடும்பத்தினரை அடித்துத் துன்புறுத்தி, இருவரைக் கற்பழித்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.[1]
- சூன் 2007 இல் ஒரு உழவரைக் கொன்று அவரது மனைவியைக் காயப்படுத்தி அவரிடமிருந்த நகைகளை கொள்ளையடித்தனர்[2].
- 2002 திசம்பர் மாதத்தில், ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் குடும்பம் இக்கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். சட்டப்படி இக்குழுவினரைக் கண்டறிந்து தண்டிக்குமாறு அரசு அப்பொழுது ஆணையிட்டது.
- 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மோகா நகரில் ஒரு கால்நடை மருத்துவரின் குடும்பம் இக்கும்பலால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது.[3]
- இலாச்கானி கிராமத்தில் இக்கொள்ளையர்களால் கொலைசெய்யப்பட்ட ராம்சந் என்பவரின் மனைவி சாவிதிரி தேவிக்கு பஞ்சாப் அரசு 20000 ரூபாயை இழப்பீடாக வழங்கியது.
- 2000 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 அன்று சலந்தர், குருதாசுபூர், ஒசியாபூர் மற்றும் அம்ரித்சர் நகரங்களில் கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டிருந்த ஒரு கலா கக்சா கும்பலை காவலர்கள் முறியடித்தனர்.[3]
- 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று இக்குழுவினர் ஒருவரைக் கொன்று, ஒரு பெண்மணியைக் கற்பழித்து, சில வீடுகளில் இருந்த நகை பணம் முதலியவற்ரைக் கொள்ளையடித்தனர். அவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rape case registered against Kale Kachche gang". May 19, 2007 இம் மூலத்தில் இருந்து 2019-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107013146/https://in.news.yahoo.com/070518/48/6fz09.html%0A%20. பார்த்த நாள்: 2007-09-22.
- ↑ "Robbers kill farmer and injure wife". June 17, 2007. http://in.news.yahoo.com/070616/48/6h2l1.html. பார்த்த நாள்: 2007-09-22. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 "Robbers attack doctor, family members, loot cash, jewellery". The Tribune. October 4, 2003. http://www.tribuneindia.com/2003/20031004/punjab1.htm#10. பார்த்த நாள்: 2007-09-22.
- ↑ "5 convicted of double murder". The Tribune. April 30, 2007. http://www.tribuneindia.com/2007/20070430/haryana.htm#8. பார்த்த நாள்: 2007-09-22.