கலிபோலி
கலிபோலி தீபகற்பம் (Gallipoli, [1] துருக்கியம்: Gelibolu Yarımadası ; பண்டைக் கிரேக்கம்: Χερσόνησος της Καλλίπολης , Chersónisos tis Kallípolis ) என்பது கிழக்கு திரேசின் தெற்குப் பகுதியிலும், துருக்கியின் ஐரோப்பியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இதன் மேற்கில் ஏஜியன் கடலும், கிழக்கே தார்தனெல்சு நீரிணையும் அமைந்துள்ளன.
கலிபோலி என்பது கிரேக்கப் பெயரான Καλλίπολις என்பதன் இத்தாலிய வடிவம் ( Kallípolis ). இதன் பொருள் 'அழகான நகரம்' என்பதாகும். அது நவீன நகரமான கெலிபோலுவின் அசல் பெயராகும். பழங்காலத்தில், தீபகற்பமானது திரேசியன் செர்சோனிஸ் ( பண்டைக் கிரேக்கம்: Θρακικὴ Χερσόνησος , Thrakiké Chersónesos ; இலத்தீன்: Chersonesus Thracica ) என்று அறியப்பட்டது.
இந்த தீபகற்பமானது தென்மேற்கு திசையில் ஏஜியன் கடலுக்குள், தார்தனெல்சு (முன்னர் எலஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டது) மற்றும் சரோஸ் வளைகுடா (முன்னர் மெலாஸ் விரிகுடா) ஆகியவற்றுக்கு இடையே செல்கிறது. பழங்காலத்தில், இது நீண்ட சுவரால் பாதுகாக்கப்பட்டது. [2] [3] [4] [5] அது பண்டைய நகரமான அகோராவின் அருகே தீபகற்பத்தின் குறுகிய பகுதியில் கட்டப்பட்ட ஒரு தற்காப்பு அமைப்பாகும். சுவர் கடந்து பகுதியானது ஓரிடத்தின் அகலமானது 36 ஸ்டேடியாக்கள் [6] அல்லது சுமார் 6.5 கிமீ (4.0 மை) மட்டுமே. ஆனால் அந்த சுவரில் இருந்து அதன் தெற்கு முனையான மஸ்துசியா முனை வரை தீபகற்பத்தின் நீளம் 420 ஸ்டேடியா [6] அல்லது சுமார் 77.5 கி.மீ (48.2 மைல்) ஆகும்.
குறிப்புகள்
தொகு- ↑ Jones, Daniel (2003) [1917], Peter Roach; James Hartmann; Jane Setter (eds.), English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-12-539683-2
- ↑ Xenophon (January 1921). Hellenica, Volume II. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674990999.
- ↑ Diodorus Siculus (January 1933). Library of History, Volume I. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674993075.
- ↑ Plinius Secundus (1855). The Natural History. London: H. G. Bohn.
- ↑ Plutarch (January 1919). Lives. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674991101.
- ↑ 6.0 6.1 Herodotus, The Histories, vi. 36; Xenophon, ibid.; Pseudo-Scylax, Periplus of Pseudo-Scylax, 67 (PDF)