கலீலுர் ரகுமான்

இந்திய அரசியல்வாதி

முகம்மது கலீலுர் ரகுமான் (Khalil ur Rahman (politician) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கலீக் உர் ரகுமான் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1936 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[1] ஐதராபாத்து நகரில் சிறுபான்மையினரின் நலனுக்கான சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராகச் செயல்பட்டார். தெலுங்கு தேசம் கட்சி ஊழியராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் தேதியன்று தனது 75 ஆவது வயதில் முகம்மது கலீலுர் ரகுமான் இறந்தார்.[2] ஐதராபாத்து மக்களுக்காக நிசாம் ருபாத்தில் மெக்காவில் உள்ள யாத்ரீகர்களுக்கு சேவைகளை வழங்கிய முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[3]

முகம்மது கலீலுர் ரகுமான்
Mohammed Khaleelur Rahman
பிறப்பு(1936-01-04)4 சனவரி 1936
ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
இறப்பு11 சனவரி 2011(2011-01-11) (அகவை 75)
ஐதராபாத்து
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்உசுமேனியா பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
அரசியலில் 52 ஆண்டுகள்
அமைப்பு(கள்)இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ayaz's bike accident: Azhar to face legal action?". The Siasat Daily.
  2. "Ex-RS member Rahman passes away". The Siasat Daily.
  3. "Ex-Rajya Sabha Member Khalilur Rahman Passes Away". fullhyderabad.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீலுர்_ரகுமான்&oldid=3810503" இலிருந்து மீள்விக்கப்பட்டது