கலு சிங் மகரா

கலு சிங் மகரா (Kalu Singh Mahara) 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போரின் போது போரில் குமாவுனிய தலைவராவராக பங்கேற்றார். குமாவுன் பகுதியிலிருந்து பங்கேற்ற முதல் சுதந்திர போராட்ட வீரராகவும் அறியப்படுகிறார். பின்னர் ஐக்கிய மாகாணத்திலும் இவர் தலைவராக இருந்தார். [1] உண்மையில் மேக்ரா என்ற இவருடைய பெயர் மகரா என்று எழுத்துப்பிழையாகிப் போனதாக கூறப்படுகிறது. [2]

தற்போது கர்ணயகரயத் என்ற பெயரில் அழைக்கப்படும் குமாவுன் கோட்டத்தில் அப்போதைய பெயரான விசங்பட்டி என்ற ஊருக்கு இவர் தலைவராக இருந்தார். இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள சம்பாவத் மாவட்டத்தின் லொகாகாட் நகரப் பஞ்சாயத்தில் கர்ணயகரயத் கிராமம் உள்ளது.

அவத் பகுதியின் அரசரிடமிருந்து மகராவுக்கு ஒரு ரகசிய கடிதம் வந்தது. [3] குமாவுன் மக்களையும் பிற மலையக மக்களையும் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியில் சேர அவர் அழைத்தார். ஆங்கிலேயர்களிடமிருந்து அதிகாரத்தை மீட்டெடுத்த பிறகு, மலைப்பகுதி குமாவுனி மக்களுக்கு திருப்பித் தரப்படும் என்றும், நிலப்பகுதி மட்டும் அவத் அரசால் கையகப்படுத்தப்படும் என்றும் அவத் அரசாங்கம் முன்மொழிந்தது. கலு மகரா உள்ளூர் மக்களை ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட ஏற்பாடு செய்தார்.

இப்போது சம்பாவத் மாவட்டத்தில் உள்ள காளி குமாவுன், சூய், கும்தேசு மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் முழுவதும் ஏற்பட்ட மோதல்கள் ஆங்கிலேயர்களை விரக்தியடையச் செய்தன. இவரது போராளிகள் முக்கியமாக துப்பாக்கி வீரர்கள் பல சந்தர்ப்பங்களில் பிரித்தானிய படையினரை சிறை பிடித்து பதுக்கி வைத்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-22. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
  2. Monika Krengel (1989). Sozialstrukturen im Kumaon. Steiner Verlag Wiesbaden
  3. Arun K. Mittal (1986). British Administration in Kumaon Himalayas: A Historical Study, 1815 – 1947. Mittal Publications - Kumaun Himalaya – p 17, of 249 pages
  • The Himalayan Gazetter by E. T. Atkinson
  • The History of Kumaun by B. D. Pandey
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலு_சிங்_மகரா&oldid=3548457" இலிருந்து மீள்விக்கப்பட்டது