கலூட்ரான் (calutron) என்பது ஒரு பொருண்மை நிறமாலைமானி (mass spectrometer) ஆகும். கலூட்ரான் யுரேனியத்தின் ஓரிடத்தான்களைப் பிரித்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

யுரேனியம்-235 ஐ மீள்விப்பதற்காக காந்தத்தில் இருந்து அல்ஃபா கலூட்ரான் தாங்கி வெளியேற்றப்படுகிறது.

ஆற்றலுள்ள அயனிகள் ஒரு காந்தப்புலத்தில் செல்லும் போது விலக்கமுறுகின்றன எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விலக்கம் ஐசோடோப்புகளின் நிறையைப் பொறுத்திருக்கிறது. எனவே ஒவ்வொரு ஐசோடோப்பும் வெவ்வேறாக விலக்கமுறுகின்றன.எனவே ஒரு தனித்த ஐசோடோப்பினை கவனமாகப் பிரித்து சேர்க்க முடியும்.

இது மன்காட்டன் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, எர்னெஸ்டு லாரன்சு என்பவரால் வடிவமைக்கப்பட்டது.[1]. இது லாரன்சு கண்டுபிடித்த சுழற்சியலைவியை ஒத்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Lawrence and His Laborator". LBL Newsmagazine. Lawrence Berkeley Lab. 1981. பார்க்கப்பட்ட நாள் 2007-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலூட்ரான்&oldid=2745951" இலிருந்து மீள்விக்கப்பட்டது