கலைஞர் கைவினைத் திட்டம்

கலைஞர் கைவினைத் திட்டம், தமிழ்நாடு அரசு கைவினைஞர்களுக்கு 5% வட்டியுடன் ரூபாய் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் 11 டிசம்பர் 2024 அன்று அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 வகையான கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் மேம்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.[1] [2][3] இத்திட்டம் இந்திய அரசு அறிவித்த பிரதம அமைச்சரின் விஸ்வகர்மா திட்டம் போன்றதே என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூபாய்.3 லட்சம் வரை பிணை இன்றி கடனுதவி பெறலாம். கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம்.ரூபாய் 50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் கடனுக்கு 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிகளின் குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

கடனுக்கு தகுதியான கைவினை கலைகள் மற்றும் தொழில்கள்

தொகு
  1. படகு தயாரித்தல்
  2. மீன்பிடி வலை பின்னுதல்
  3. நகை செய்தல் & உலோக வேலைப்பாடுகள்
  4. துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல்
  5. மண்பாண்டம் & சுடுமண் வேலைகள்
  6. கூடை முடைதல் & துடைப்பான் செய்தல்
  7. கட்டிட வேலை
  8. மரவேலைப்பாடுகள்
  9. சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல் & சுதை வேலைப்பாடுகள்
  10. கயிறு & பாய் பின்னுதல்
  11. பொம்மை தயாரித்தல்
  12. மலர் வேலை செய்தல்
  13. தையல் வேலை
  14. சிகையலங்காரம் & அழகுக்கலை
  15. துணி வெளுத்தல் & துணி தேய்த்தல்
  16. இசைக்கருவிகள் தயாரித்தல்
  17. பாசிமணி வேலைப்பாடுகள்
  18. மூங்கில், சணல், பனை ஓலைத் தொழில் & . பிரம்பு வேலைப்பாடுகள்
  19. ஓவியம் வரைதல் & வர்ணம் பூசுதல்
  20. பூட்டு தயாரித்தல்
  21. கண்னாடி வேலைப்பாடுகள்
  22. பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள்

விமர்சனங்கள்

தொகு

இந்திய அரசு கொண்டு வந்துள்ள பிரதம அமைச்சரின் விஸ்வகர்மா திட்டத்தின் பிரதியே கலைஞர் கைவினைத் திட்டம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.[4][5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைஞர்_கைவினைத்_திட்டம்&oldid=4162109" இலிருந்து மீள்விக்கப்பட்டது