கல்கா குகைக் கோயில்
கல்கா தேவி கோயில், கல்கா தேவி குகைக் கோயில், கல்கா தேவி மந்திர் என்று அழைக்கபடுவது பாக்கித்தானில் உள்ள ஒரு இந்துக் கோயில்களில் ஒன்றாகும். இது பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் அரோரில், கல்கா மலையில் உள்ள ஒரு இயற்கையான குகைக்குள் [1] அமைந்துள்ளது. [2] [3] இந்தக் கோயில் கல்கா தேவியின் ஆஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது இந்துக்களாலும், இசுலாமியர்களாலும் பார்வையிடப்படுகிறது. [4] இந்தியாவில் இருந்து இந்துக்களும் இங்கு வருகை தருகின்றனர். [5] இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். [6]
கல்கா குகைக் கோயில் | |
---|---|
கல்கா குகைக் கோயிலின் தோற்றம் | |
அமைவிடம் | |
நாடு: | பாக்கித்தான் |
மாநிலம்: | சிந்து மாகாணம் |
மாவட்டம்: | சுக்கூர் மாவட்டம் |
அமைவு: | ஆரோர் |
ஆள்கூறுகள்: | 27°37′33.8″N 68°55′51.3″E / 27.626056°N 68.930917°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோவில் |
முக்கியத்துவம்
தொகுபாக்கித்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்து கோவில்களில் இதுவும் ஒன்றாகும். [7] தொன்மத்தின் படி, கல்கா தேவி ஹிங்லாஜ் மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த இடத்திற்கு வந்தார். கோயிலின் பராமரிப்பாளரின் கூற்றுப்படி, கல்கா குகை கோவிலில் இருந்து ஹிங்லாஜ் மாதா கோயிலை இணைக்கும் இரண்டு சுரங்கங்கள் உள்ளன என்கிறார். [8]
இந்தக் கோயில் காளி தேவிக்காக அமைக்கபட்டுள்ளது. கல்கா என்ற சொல்லுக்கு ஷஷ்டி மொழியில் சக்தி என்று பொருள். ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை மாலையில் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். [9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Farooq Soomro (23 December 2014). "Where the city of Aror once stood in glory". Dawn. https://www.dawn.com/news/1152687.
- ↑ Farooq Soomro (23 December 2014). "Where the city of Aror once stood in glory". Dawn. https://www.dawn.com/news/1152687.
- ↑ Rumana Husain (29 May 2016). "Kot Diji, Arore and a bit of Sukkur". The News. https://www.thenews.com.pk/tns/detail/561018-kot-diji-arore-sukkur.
- ↑ Salman Ali (19 November 2017). "Temple reflections — Asthan of Kalka Devi". Daily Times. https://dailytimes.com.pk/136177/temple-reflections-asthan-kalka-devi/.
- ↑ "SUKKUR: Indian pilgrims worship at Sadh Belo, Arore Temple". Dawn. 7 December 2006. https://www.dawn.com/news/222172/sukkur-indian-pilgrims-worship-at-sadh-belo-arore-temple.
- ↑ Essa malik, Munira Abbas (23 January 2015). "Discovering Sindh". https://tribune.com.pk/story/826576/discovering-sindh?amp=1.
- ↑ Budhaditya Bhattach (28 July 2014). "Monumental effort". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/reema-abbasis-historic-temples-of-pakistan-a-call-to-conscience-presents-a-side-of-pakistan-not-many-would-be-familiar-with/article6252711.ece.
- ↑ Farooq Soomro (23 December 2014). "Where the city of Aror once stood in glory". Dawn. https://www.dawn.com/news/1152687.
- ↑ Salman Ali (19 November 2017). "Temple reflections — Asthan of Kalka Devi". Daily Times. https://dailytimes.com.pk/136177/temple-reflections-asthan-kalka-devi/.