கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம்

கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம் (Kalpakkam Atomic Reprocessing Plant) கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில்,[1] இந்திய அணுக்கரு வல்லுனர்கள் வடிவமைத்து அமைத்த அணுக்கரு எரிபொருளை மீள்உருவாக்கும் நிலையத்தைக் குறிப்பதாகும்.‎[2] இந்த நிலையம் ஆண்டொன்றிற்கு 1000 டன் புளுத்தோனியம் தனிமத்தை மீள்உருவாக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஆலையின் வடிவமைப்பு பல புதுமையான செயல்பாடுகளையும், புதிய தொழில் நுட்பங்களையும், நவீன சிறப்பியல்புகளையும் கொண்டதாகும். எடுத்துக்காட்டாக, அதிக வெப்பத்தில் செயல்படும் கலன்களுக்கான கலப்பின பராமரிப்பு வசதிகள் (hybrid maintenance concept) முதன் முறையாக இங்கு செயல்பட்டது. இதற்காக அஞ்சற்கருவிக் கையாளுவிகள் (servo-manipulators) வடிவமைத்து உருவாக்கி, பின்னர் அதைப் பொருத்தினார்கள். பல பொறியியல் ஒதுக்கீடுகள் (engineered provisions) அமைக்கப்பெற்றது. இவற்றின் காரணமாக இந்நிலையத்தின் செயல்பாட்டுக்காலம் மேலும் நீடிக்கவும் இது வழி வகுத்தது. இந்த நிலையம் சென்னை அணுமின் நிலையத்தில் இருந்தும், வேக ஈனுலையில் இருந்தும் கழிவுப்பொருளாக வெளியேறும் எரிபொருளை மீள்உருவாக்க வல்லது. உலகிலேயே முதல் முறையாக இந்நிலையத்தில் தான் அதிக அளவில் கதிர்வீச்சேற்றப் பொருட்கள், குறிப்பாக கார்பைடு கலந்த அணுஉலை எரிபொருள் கொண்ட கழிவுகள் மீள் உருவாக்கப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. IGCAR
  2. ^ 'http://www.npcil.nic.in/main/AboutUs.aspx
  3. ^ http://www.globalsecurity.org/wmd/world/india/kalpakkam.htm