கல்பாசி என்பது காட்டுப் பகுதிகளில் பாறைகளில், மரக்கிளைகளில், பனை தென்னை மரங்களின் மீது தேமல் பட்டதுபோல படர்ந்து வளரும் பாசி. பாசி என்று அழைத்தாலும் இது உண்மையில் இரண்டு உயிரினங்கள் இணைந்து நட்பு வாழ்க்கை நடத்தும் ஒன்றிய வாழ்வு முறையாகும். கிட்டத்தட்ட 1000 வகை கல்பாசிகள் உலகில் உள்ளன.

ஒரு உயிரி பூஞ்சனம், இன்னொன்று நீலப்பச்சைப்பாசி. பாசியை ஃபோட்டோ பயான்ட் என்பார்கள், பூஞ்சனத்தை மைக்கோபயான்ட் என்பார்கள். பாசி ஒளிச்சேர்க்கை செய்து சக்தி தருகிறது. பூஞ்சனம் வாழ இடத்தை உண்டுபண்ணித் தருகிறது. ஆயிரம் வகை கல்பாசிகள் பல்வேறுவிதமான பூஞ்சனங்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதில் 4 வகை பாசிகள்தான் திரும்பத்திரும்பக் காணப்படுகின்றன. குறிப்பாக ரைசோனீமா என்ற நீலப்பச்சப் பாசிதான் அதிகம். இதை முதலில் சைட்டோனீமா என்று தவறாக கருதிவந்தார்கள், டி என் ஏ சோதனை மூலம் ரைசோனீமா என்பது முடிவாயிற்று.

பல்வேறு வகையான பூஞ்சனங்கள் ஒரே வகைப் பாசியை துணையாகக் கொண்டு வாழ்வதைப் பார்க்கும்போது, பரிணாமத்தில் பூஞ்சனங்கள் தம்மிடையே பாசிகளை பங்கிட்டுக் கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது. ஆரம்ப காலத்தில் விவசாயிகள் தமக்குள் விதைகளை பகிர்ந்து கொண்டார்கள். அதுபோல பூஞ்சனங்களும் பாசிகளைப் பகிர்ந்துகொண்டு பல்லுயிர் ஓம்பின என்று தெரிகிறது.

இவற்றையும் பார்க்கவும்‌

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பாசி&oldid=4164845" இலிருந்து மீள்விக்கப்பட்டது