கல்பொரு சிறுநுரையார்

கல்பொரு சிறுநுரையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாடலால் பெயர் பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர். இவரதுப் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 290.

பாடல்

தொகு

'காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது
அறியுநர் கொல்லோ அனை மதுகையர்கொல்
யாம் எம் காதலர்க் காணேம் ஆயின்
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல் பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லாகுதுமே'

பாடல் தரும் செய்தி

தொகு

நீர் பாறாங்கல்லில் மோதும்போது நுரை உண்டாகும். அந்த நுரையின் துளி ஒவ்வொன்றாக உடைந்து இல்லாமல் போகும். காமம் என்னும் நீர் என்மீது மோதுவதால் நான் நுரை போல வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் என் உயிர் இல்லாமல் போய்விடும்.

காமத்தைப் பொறுத்துக்கொண்டு அவரை நினைக்காதிரு என்கிறார்களே! அவர்களுக்குக் காமத்தைப் பற்றித் தெரியுமா? என்றாவது காமத்தை மறந்திருக்கும் வலிமை பெற்றிருந்தார்களா? - என்று தலைவி தன் தோழியிடம் வினவுகிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பொரு_சிறுநுரையார்&oldid=3177052" இலிருந்து மீள்விக்கப்பட்டது