கல்யாண் வர்மா
கல்யாண் வர்மா இந்தியாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற காட்டுயிர் புகைப்படக் கலைஞர். இவர் பிபிசி மற்றும் நேசனல் சியாகிரபிக் முதலிய நிறுவனங்களுக்கு காட்டுயிர் தொடர்பான படங்கள் எடுப்பதில் பணியாற்றியுள்ளார்.
கல்யாண் வர்மா | |
---|---|
2006 இல் வர்மா | |
பிறப்பு | சனவரி 13, 1980 |
இருப்பிடம் | பெங்களூர், இந்தியா |
பணி | காட்டுயிர் புகைப்படக் கலைஞர், திரைப்பட இயக்குநர் |
வலைத்தளம் | |
KalyanVarma.net |
பெங்களூரில் வசித்து வரும் இவர் முழுநேர புகைப்படக் கலைஞராவதற்கு முன்பு யாகூ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் காட்டுயிர்களின் மீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக அப்பணியைத் துறந்து புகைப்படம் எடுப்பதில் ஈடுபட்டு வருகிறார்.