கல்லாரைச் சமர்

ஈழப் போரில் 2008 இல் நடந்த சமர்

கல்லாரைச் சமர் (Battle of Kallarawa) என்பது 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடல் புலிகளை இலங்கை கடற்படையினர் மறித்ததால் உண்டான ஒரு சடற் சமராகும்.

கல்லாரைச் சமர்
ஈழப் போர் பகுதி
நாள் 25, மார்ச் 2008
இடம் off கல்லாரை, இலங்கை
போராளிகளை கட்டாயப்படுத்தி வெளியேறியதாக இலங்கைக் கடற்படை கூறியது
பிரிவினர்
இலங்கைக் கடற்படை கடற்புலிகள்
பலம்
பல விரைவுத் தாக்குதல் கப்பல்கள் 10 விரைவுத் தாக்குதல் கப்பல்
6 suicide boats
இழப்புகள்
அரசாங்கம் எதையும் குறிப்பிடவில்லை ஒரு விரைவுக் கப்பல் சேதமடைந்ததாக அரசு கூறியது

பின்னணி

தொகு

முந்தைய நாள் கடற்புலிகளின் செயல்பாட்டின் காரணமாக ஒரு துவோரா விரைவுத் தாக்குதல் கப்பல் வெடித்தது. 45 நிமிட சமரில் கப்பல் அழிக்கப்பட்டதாக போராளிகள் கூறினர், இருப்பினும் விசாரிக்க அனுப்பப்பட்ட மற்றொரு துவோரா அதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கத் தவறியது. அடுத்த நாள் போராளிகளின் ரோந்தைக் கண்ட இலங்கை கடற்படை அதை இடைமறிக்க ஒரு படையை அனுப்பியது.

சமர்

தொகு

உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில் கடற்கரைக்கு அருகில் போராளிகளின் கப்பல்களை அரசின் கப்பல் கண்டது. ஒரு டசன் போராளிகளின் கப்பல்கள் சமரில் ஈடுபட்டன, கடற்புலிகள் பின்வாங்குவதற்கு முன்பு குறைந்தது ஒரு கப்பல் சேதமடைந்தது. மோதல் மூன்று மணி நேரம் நீடித்தது. தங்களுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், ஆனால் ஒரு போராளிப் படகை முடக்கியதாகவும் இலங்கை கடற்படை கூறியது. கடல் புலிகள் கடலில் இருந்து விலகிச் சென்றதாக அது மேலும் கூறியது.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாரைச்_சமர்&oldid=4055864" இலிருந்து மீள்விக்கப்பட்டது