கல்லா மண்ணா

தமிழக நாட்டுப்புற விளையாட்டு

கல்லா மண்ணா தமிழக நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியரால் விளையாடப்படும் விளையாட்டு. அண்மைக் காலத்தில் மறைந்துவரும் விளையாட்டுகளில் ஒன்று.

நிழலில் ஆடும் கல்லா மண்ணா விளையாட்டு

பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் தொடவேண்டும். பட்டவர் கல் என்று சொன்னால் கல்லில் நிற்பவரை மட்டுமே தொடுவார். மண்ணில் நிற்பவரைத் தொடக்கூடாது. பட்டவர் மண் என்று சொன்னால் மண்ணில் நிற்பவரை மட்டுமே தொடுவார். கல்லில் நிற்பவரைத் தொடக்கூடாது. பட்டவராகித் தொடுபவர் கல் என்று சொன்னதையும் மண் என்று சொன்னதையும் மாற்றிச் சொல்லிவிட்டுத் தொட முனைவார்.

தொட்டுவிட்டால் தொடப்பட்டவர் தொடப்பட்டவர் தொடுபவர் ஆகி ஆட்டம் தொடரும். கல்லையோ, மண்ணையோ கோலால் தொட்டுக்கொண்டு நின்றுகொண்டு விளையாடுதலும் உண்டு. கோலால் தொடுவதாயின் அனைவரும் கோலைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லா_மண்ணா&oldid=4164874" இலிருந்து மீள்விக்கப்பட்டது