கல்லுக்குச்சி

சிறுவர்கள் விளையாட்டு

கல்லுக்குச்சி சிறுவர்கள் விளையாடும் ஒரு குழு விளையாட்டு.

குச்சி எறிதல்

ஆட்ட விவரம்

தொகு

எல்லாச் சிறுவரும் தம் கையில் ஒரு முழ நீளத்துக்குக் குறையாத ஒரே அளவுள்ள ஒரு குச்சி வைத்திருப்பர். ஒருவர் குனிந்து தம் கைக்கு எட்டும் தூரத்தில் தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போடுவார். அந்த வட்டம் அனைவருக்கும் உத்தி இடமாகப் பயன்படுத்தப்படும். அந்த வட்டத்துக்குள் நின்றுகொண்டு ஒவ்வொருவரும் அடுத்தடுத்துத் தன் குச்சியை எறிவர்.

எறியும்போது ஒரு காலைத் தூக்கி நின்று அதன் கீழ் உள்ள கால் கவட்டிக்குக் கீழாக எறிவர். யாருடைய குச்சி உத்தியிலிருந்து குறைந்த தொலைவில் விழுந்துகிடக்கிறதோ அந்தக் குச்சிக்காரர் பட்டவர். முதலில் ஒருவர் பட்டவர் குச்சியைத் தன் குச்சியால் தூக்கி எறிவார். பட்டவர் தன் குச்சியை எடுக்க முனைவார். அவர் எடுக்குமுன் மற்றவர்கள் அவரவர் குச்சியால் தூக்கி எறிந்துகொண்டே செல்வர். பட்டவர் தன் குச்சியை எடுத்ததும் அங்கிருந்து அவர் நொண்டி அடித்துக்கொண்டு உத்திவட்டம் வரை வரவேண்டும். இது தோற்றவருக்கு வழங்கும் தண்டனை.

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமாழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லுக்குச்சி&oldid=981969" இலிருந்து மீள்விக்கப்பட்டது