கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில்
கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் கல்லுக்குழி எனும் ஊரில் அமைந்துள்ளது. [1] இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், நவகிரகம், சக்கரத்தாழ்வார், பாண்டுரங்கன், நாகர் போன்ற சன்னதிகள் உள்ளன.
இக்கோயில் 150 வருடங்களுக்கு முன்பு தோன்றியதாகும்.
மூலவர்
தொகுஓரடி உயரமுள்ள மூலவர் சிலை. இந்த சிலையின் இடம் பாதம் வடக்கு நோக்கியும், வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இடது கரத்தில் பாரிஜாத மலரை வைத்திருக்கிறார்.. வலது கரத்தில் அபய ஹஸ்தம் எனும் ஆசி வழங்குதல் நிலையில் உள்ளார்.
தலவரலாறு
தொகுசுமார் நூறு வருடங்களுக்கு முன்பு தொடருந்தில் வந்த பயணியை பரிசோதர் பரிசோதித்தார். அந்தப் பயணி அதிக எடை கொண்ட ஒரு மூட்டையை வைத்திருந்தார். அதற்கு சரியான கட்டணம் கட்டப்படவில்லையென கூறி அபராதம் விதித்தார். ஆனால் அதற்கு தன்னிடம் பணம் இல்லையென கூறி அதைப் பிறகு வாங்கிக் கொள்கிறேன் என சென்றுவிட்டார். அதன்பின்பு அவர் வரவேயில்லை. சந்தேகம் கொண்டு அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தால் அதில் ஆஞ்சநேயர் சிலை இருந்தது. அதனை அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அருகிலேயே கோயில் கட்டி வழிபட்டனர்,
விழாக்கள்
தொகுஅனுமன் ஜெயந்தி இக்கோயிலில் சுதர்சன யாகத்தினை மாதந்தோறும் செய்கின்றனர். லட்சார்ச்சனை நடைபெறும்.