கல்லோ மற்றும் பூதங்கள்
கல்லோ அண்ட் தி கோப்ளின்ஸ் ஒரு கிரேக்க விசித்திரக் கதை ஆகும் . ஃபானி பாபலௌகா, நிக்கொலஸ் போலிடிஸ் மற்றும் ஹாரிஸ் சக்கெல்லாரியோ இக்கதியின் வெவேறு வடிவங்களைச் சேகரித்துள்ளனர். [1]
சுருக்கம்
தொகுஒரு கொழுத்த பெண்ணுக்கு ஒரு அசிங்கமான மிருகம் போன்ற மூத்த மகளான மார்போ மற்றும் ஒரு அழகான இளைய மகளான கல்லோ இருந்தனர். மக்கள் கல்லோவைப் போற்றினர் மற்றும் மார்போவைப் பார்த்துப் பரிதாபப்பட்டனர்; மார்போ அதை வெறுத்து கல்லோவை எல்லா வேலைகளையும் செய்ய வைத்தாள்.
ஒரு நாள், அவர்களில் ஒருவரை மாவு அரைக்க ஆலைக்குச் செல்லும்படி அம்மா கேட்டார்; கல்லோவை அனுப்புமாறு மார்போ வலியுறுத்தினாள். கல்லோ அங்கு சென்றாள். அஙு பலர் அரைத்துக் கொண்டிருந்தார்கள். மாவு அறைப்பவர் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு அவளுடைய தானியங்கள் இயந்திரத்திற்குள் கொட்டப்பட்டன; இதனால் அவள் காத்திருக்க வேண்டியிருந்தது. நள்ளிரவில், பூதங்கள் வெளியே வந்து அவளை சாப்பிட அச்சுறுத்தியது. கல்லோ அவர்கள் அவளை பழைய உடை அணிந்திருக்கையில் சாப்பிட முடியாது என்று கூறினாள்; அவளுக்கு ஒரு புதிய ஆடை தேவைப்படுவதாகக் கூறினாள். அவர்கள் அவளுக்காக ஒரு சிறந்த ஆடையைத் திருடித் தந்தபோது, தனக்கு மற்ற பொருட்களான, ஒரு மேலாடை, ஒரு குடை, ஒரு சீப்பு, முகப் பொடி மற்றும் அவள் நினைக்கும் அனைத்தும் தேவை என்று சொன்னாள். பின்னர் விடியல் வந்ததும் பூதங்கள் வெளியேற வேண்டியிருந்தது. மாவறைப்பவர் அவளின் தானியத்தை அரைத்தார். கல்லோ பூதங்கள் கொடுத்ததையும் மாவையும் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றார்.
மார்போ அவளிடம் பொறாமைப்பட்டு மாவை வீணாக்கினான். புத்தாண்டு தினத்தில், இன்னும் அதிகமாக மாவு தேவைப்பட்டது. அப்போது மார்போ சென்றாள். பூதங்கள் வந்ததும், அவள் முகத்தைச் சொறிந்தன. அவள் உதவிக்காக அலறினாள்;மாவறைப்பவர் அவளைக் காப்பாற்றினார். ஆனால் அவள் எதையும் பெறவில்லை. கல்லோ பூதங்களின் முகப் பொடியை அவள் மீது பூசி அவள் முகத்தைக் குணப்படுத்தினாள்.
வர்ணனை
தொகுகல்லிகாந்த்சாரோஸ் என்றழைக்கப்படும் இப்பூதங்கள், பூமிக்கு அடியில் வாழ்கின்றன; பூமியைத் தாங்கி நிற்கும் மரத்தை வெட்ட முயற்சிக்கின்றன. அது ஏறக்குறைய கீழே இருக்கும் போது, அவர்கள் கிறிஸ்துமஸ் என்று தெரிந்துகொண்டு குறும்பு செய்ய மேலே வருகிறார்கள்; கிரேக்க மரபுவழிப் பாதிரியார்கள் தண்ணீரை ஆசீர்வதிக்கும் போது அவர்கள் மீண்டும் கீழே தள்ளப்படுகிறார்கள். [2]
மேலும் பார்க்கவும்
தொகு- வைரங்கள் மற்றும் தேரைகள்
- தந்தை ஃப்ரோஸ்ட் (தேவதைக் கதை)
- அம்மா ஹுல்டா
- முதிய சூனியக்காரி
- கிணற்றில் மூன்று தலைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Soula Mitakidou and Anthony L. Manna, with Melpomeni Kanatsouli, Folktales from Greece: A Treasury of Delights, p 61 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56308-908-4
- ↑ name="auto">Soula Mitakidou and Anthony L. Manna, with Melpomeni Kanatsouli, Folktales from Greece: A Treasury of Delights, p 61 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56308-908-4ISBN 1-56308-908-4