கல்வி சமூகவியல்
கல்வி சமூகவியல்
கல்வி செயல்முறை ஒரு சமூக செயலாகும் என்பது கல்விச் சமூகவியலின் அடிப்படைக் கருத்தாகும். சமூகவியலின் விதிகளையும், முறைகளையும் பல கல்விப் பிரச்சனைகளுக்கு விடை காண கல்வி சமூகவியல் பயன்படுகின்றது என்று ஷ்மித் விளக்கம் தருகின்றார். கல்விக் கூடங்கள் சமூக நிலையங்களே ஆகும். சமுதாயத்தின் தொழில்களில் கல்வி புகட்டுதல் ஒன்றாகும். கல்வியினால் சமூகம் பெறும் பயன்களையும், இவற்றை முழுமையாக அடையும் வழி வகைகளையும் கல்விச் சமூகவியல் எடுத்துக் காட்டுகின்றது. கல்வி சமூகவியல் மாணாக்கரை முழுமையான சமூக இயல்பு பெற்றவர்களாக உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. கல்வியானது மாணாக்கரிடையே குழு உணர்ச்சியை தூண்டி சமூக பண்புகளை தோற்றுவிக்கின்றது. ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்போர் என்று மட்டும் எண்ணிக் கொள்ளாமல், தம்மைச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் கருத வேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு ஆசிரியர்கள் சமூகவியல் அறிவு பெற்றவற்களாக இருத்தல் இன்றியமையாகிறது. "கல்வி சமூகவியல்" என்னும் சொற்றொடரை முதன் முதலாக, டாக்டர். ஜே.எம். கில்லட் என்பார் பயன்படுத்தினார்.1907 ஆம் ஆண்டு முதல் தான் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளின் கல்விச் சமூகவியல் ஒரு தனிப்பாடமாக அமைக்கப்பட்டது.
கல்விச் சமூகவியலின் நோக்கங்கள்: 1. சமூகத்தின் ஆசிரியர்களது பங்கினைத் தெளிவாக்கி அதை மேலும் முக்கியமானதாக உயர்த்தல் 2. சமூக நிலையங்களில் கல்விப் பயன்களை ஆராய்தல் 3. ஆசிரிய மாணாக்கத் தொடர்பின் சமூக விளைவுகளை உணர்ந்து கற்றலை ஊக்குவிக்க இவற்றைப் பயன்படுத்துதல் 4. பள்ளி அமைந்திருக்கும் சமூதாயத்தின் தேவைகளை உணர்தல் 5. பள்ளிக்கும் பிற சமூக நிலையங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பினை உருவாக்கல் 6. சமூதாயத்தில் இன்று காணப்படும் பல்வேறு போக்குகளை ஆராய்ந்து, தனி மனிதர்களையும் பள்ளிகளையும் இவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை தெளிவாக்கல் போன்றவையாகும்.
{{subst:மேற்கோள்}}-1. கல்வியும் உளவியலும்- பாஞ். இராமலிங்கம்
2.கல்வி உளவியல் -பேரா. கி. நாகராஜன்