கல்வி சுதந்திர நாள்

கல்வி சுதந்திர நாள் (Education Freedom Day) என்பது 2013 இல் டிஜிட்டல் சுதந்திர அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட ஒரு அனைத்துலக நிகழ்வாகும். இது ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இது மென்பொருள் சுதந்திர நாள், வன்பொருள் சுதந்திர நாள் மற்றும் கலாச்சார சுதந்திர நாள் ஆகியவற்றைப் போன்றது ஆகும். இதன் குறிக்கோள் கட்டற்ற மென்பொருள் மற்றும் கல்விக்கான இலவச கல்வி வளங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் பரப்புவதாகும். [1]

வரலாறு தொகு

முதல் கல்வி சுதந்திர நாள் ஜனவரி 17, 2013 அன்று கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும், சீனப் புத்தாண்டு மற்றும் பள்ளிகள் மூடப்படும் கோடை விடுமுறைகள் போன்ற உள்ளூர் விடுமுறைகளுடன் பொருந்தாததால், அந்த நாள் பின்னர் மாற்றப்பட்டது. தற்போது மார்ச் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், மார்ச் 21 இல் கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கான ஒருங்கிணைப்புப் பணிகள் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. உள்ளூர் கல்விச் சமூகங்களுக்கு பயனளிக்கும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்க தன்னார்வலர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சான்றுகள் தொகு

  1. "Education Freedom Day". AnydayGuide. பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வி_சுதந்திர_நாள்&oldid=3452772" இலிருந்து மீள்விக்கப்பட்டது