கல் எடுத்தல்
கல் எடுத்தல் சிறுவர் சிறுமியர் விளையாடும் போட்டி விளையாட்டுகளில் ஒன்று.
ஆட்ட விவரம்
தொகு- அரங்கம்
இதனை தெருமண்ணில் காலால் தேய்த்து உத்திக்கொடு போடுவர். சுமார் ஐந்தடி இடைவெளியில் 30 அடி தொலைவுக்கு இரண்டு கல்-வைக்கும் கோடுகள் போடுவர். ஒவ்வொரு கோட்டிலும் சம இடைவெளியில் 5 அல்லது 7 கற்கள் வைக்கப்பட்டிருக்கும்.
- ஆட்டம்
இருவர் போட்டியிடுவர். ஓடிச் சென்று முழங்காலும் தொடையும் படியும்படி உட்கார்ந்து ஒவ்வொரு கல்லாக எடுத்துவந்து அதேபோல் உட்கார்ந்து உத்திக்கோட்டில் கல்லை வைக்க வேண்டும். இருவரில் யார் முதலில் எல்லாக் கற்களையும் உத்தியில் சேர்க்கிறாரோ அவர் பழம். அடுத்து, தோற்றவரோடு இன்னொருவர் போட்டியிடுவார்.
ஓடுதல், உட்கார்ந்து எழுதல் ஆகியவை நல்ல உடற்பயிற்சி.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980