களனிய திச்சன்

களனிய திச்சன் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி) என்பவன் மேற்கிலங்கையில் இருந்த களனி இராச்சியத்தின் மன்னன். இவனின் மகள் விகாரமாதேவி.

களனிய இராச்சியம்

தொகு

களனி பகுதியை ஆண்ட களனிய திச்சனுக்கு ஒரு மகள் உண்டு. அவள் இன்னொருவன் மேல் காதல் கொண்டுள்ளாள் எனத் தெரிந்தவுடன் அவளைத் தனிமைப்படுத்தினான் களனியன். அவளின் காதலன் ஒரு பிக்குவின் மூலம் அவளுக்கு ஓலையில் செய்தி அனுப்ப அது களனிய திச்சன் கையில் கிடைத்தது. அதைப் பார்த்த அவன் பிக்கு தான் இந்த ஓலையை கொடுத்தான் என நினைத்து அவனைக் கொன்று விட்டான். இதனால் ஏற்படவிருந்த வெள்ளப்பெருக்கைத் தடுக்க களனியன் மகளைக் கடலுக்குப் பலி கொடுக்கச் சொன்னார்கள் களனியத்தின் கணியர்கள். அதன்படி அவன் தன் மகளைக் கடலில் ஒரு படகில் ஏற்றி அனுப்பிவிட்டான். வெள்ளத்தால் அலைக்களிக்கப்பட்ட படகு உருகுணை இராச்சியத்தின் காகவண்ண தீசனிடம் கிடைக்கிறது. அதில் உள்ள களனியின் இளவரசியை காகவண்ணன் திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு பிறந்தவனே துட்டகைமுனு ஆவான்.

மூலம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=களனிய_திச்சன்&oldid=1541806" இலிருந்து மீள்விக்கப்பட்டது