களியாக்கிப் போடுதல்

களியாக்கிப் போடுதல் என்பது கருப்பமுற்ற பெண்ணுக்கு ஐந்தாவது மாதத்தில் செய்யப்படும் இந்து சமய சடங்காகும். இந்தச் சடங்கில் செய்யப்படும் மூலிகைச் சாற்றால் பிறக்கப்போகும் குழந்தைக்கு சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என நம்புகிறார்கள்.

இந்தச் சடங்கினைப் பெண் வீட்டார் முன்னின்றுசெய்கின்றார்கள். களி கிண்டுவதற்கான அரிசி மாவு, சாமி கும்பிட வாழைப்பழம், தேங்காய் ஆகியனவற்றைப் பெண் வீட்டார்கள் கொண்டு வருகின்றார்கள்.

மூலிகைச் சாறு தொகு

இச்சடங்கிற்குக் கோவைத் தளை, பூவரசு தளை, புண்ணாக்குத் தளை ஆகிய மூன்றையும் உரலில் இடித்துச் சாறு எடுக்கப்படும். இவ்வாறு சாறு எடுக்கையில் முதல் சாறு, இரண்டாம் சாறு என்று பிரித்துவைக்கின்றார்கள். அதில் முதல் சாற்றினை ஒரு பாத்திரத்தில் சாமியறையில் வைத்துக் கும்பிட்டுவிட்டு, குளித்துப் புதுப்புடவை உடுத்தியிருக்கும் கருப்பிணிப் பெண்ணிற்கு மூன்று சுமங்கலிகள் கொடுப்பார்கள்.

களி தொகு

அந்நாளின் நல்ல நேரத்தில் ஈர அரிசி மாவை வறுத்து, நீரிட்டுக் களியாக்குகின்றனர். இதனோடு மூலிகையின் இரண்டாம் சாற்றினை சேர்த்துவிடுகின்றனர். இந்தக் களியானது அனைவருக்கும் உண்ணக் கொடுக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களியாக்கிப்_போடுதல்&oldid=2152194" இலிருந்து மீள்விக்கப்பட்டது