கழுதை (சீட்டு ஆட்டம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கழுதை என்பது ஒரு எளிய சீட்டு விளையாட்டு ஆகும். தமிழர் மத்தியில் இது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது.
பொதுவாக நான்கு பேருக்கும் 13 சீட்டுக்களாக 52 சீட்டுக்களும் பிரிக்கப்படும். ஆட்டத்தின் நோக்கம் விரைவாக 13 சீட்டுக்களையும் தள்ளிவிடுவதுதான். எல்லோருடமும் ஒரே இனம் இருந்தால் அந்த சுற்று சீட்டுக்கள் கழியும். யார் பெரிய சீட்டு போடுகிறார்களோ (A, K, Q, J, 10...2) அவர்களே அடுத்த சுற்றில் முதலில் போட வேண்டும். ஒருவரிடம் அந்த இனம் இல்லாவிட்டால், அவர் வேறு இனத்தால் வெட்டிவார். அதாவது அதுவரை மேசையில் போடப்பட்ட சீட்டுக்களை பெரிய சீட்டு போடுபவர் எடுக்க வேண்டும்.