கவசத் தோத்திரங்கள்
கவசத் தோத்திரங்கள் என்பவை இறைவனை வேண்டும் தோத்திரப் பாடல்கள். தன் உடலையும், உயிரையும் பகைவர்களிடமிருந்தும், விலங்கு முதலான பகைகளிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று இந்த வகையான நூல்கள் இறைவனை வேண்டும். [1]
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி தன் மார்பில் புலிநிறக் கவசம் அணிந்திருந்தான். [2] மதுரை அங்காடித் தெருவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களில் ஒன்று 'மெய்புகு கவசம்'. [3] உடலைக் கவ்விக்கொண்டிருப்பது கவசம்.
திருநீற்றைத் திருவாசகம் "ஆன நீற்றுக் கவசம்" என்று குறிப்பிடுகிறது. ஷடங்க மந்திரங்கள் எனக் கூறப்படுகின்ற ஆறு வகை மந்திர வகைகளில் ஒன்று கவச மந்திரம். இதனை 'ரட்சை' எனவும் கூறுவர்.
கவசத் தோத்திர நூல்கள்
தொகு- இலக்குமி தோத்திரம்
- கந்தர் சஷ்டி கவசம்
- சத்தி கவசம்
- சிவ கவசம்
- சிவாட்டகம்
- சூரிய தோத்திரம்
- நாராயண கவசம்
- மிருத்தியுஞ்சய தோத்திரம்
- விநாயக கவசம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 178.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய, எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், (புறநானூறு 13)
- ↑ மெய் புகு கவசமும், (சிலப்பதிகாரம் 14-169)