கவிந்திர பரமேசுவர்

வங்காள மொழிக் கவிஞர்

கவிந்திர பரமேசுவர் (Kavindra Parameshwar) ஓர் இடைக்கால வங்காளக் கவிஞராவார். இவர் மகாபாரதத்தின் முதல் வங்காளப் பதிப்பான கவிந்திர மகாபாரதத்தை எழுதினார்.[1]

சுயசரிதை தொகு

பரமேசுவர் கூக்ளியின் சப்தகிராமத்தில் உள்ள பாலாண்டாவில் பரமேசுவர் தாஸ் என்ற பெயரில் பிறந்தார். இவரது இலக்கியப் பங்களிப்புகளுக்காக கவிஞர்களில் முதன்மையானவர் என்று பொருள்படும் கவிந்திரா என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. இவரது தந்தை குணராஜ், ஒரு ஜமீந்தாரும் மற்றும் ஒரு செல்வாக்கு மிக்க உள்ளூர் தலைவருமாவார்.

பரமேசுவர் வங்காள சுல்தானகத்தின் ஆளுநர் பரகல் கானின் அரசவைக் கவிஞராக இருந்தார். பரகல் கானின் வேண்டுகோளின்படி, இவர் மகாபாரதத்தின் சுருக்கப்பட்ட பதிப்பை வங்காள மொழியில் எழுதினார். இது மகாபாரதத்தின் முதல் வங்காளப் பதிப்பு (சமசுகிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) என்று நம்பப்படுகிறது. இவர் அதை கி.பி.1519-1519 இல் எழுதினார். இவரது பதிப்பு கவிந்திர-மகாபாரதம் என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Sengupta, Nitish K. (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib (in ஆங்கிலம்). Penguin Books India. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341678-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிந்திர_பரமேசுவர்&oldid=3867208" இலிருந்து மீள்விக்கப்பட்டது