கவுடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கவுடு பண்டைய தமிழர்களின் அணிகலன்களில் ஒன்று. ஆண்கள் கழுத்தை ஒட்டி அணியக்கூடிய இந்த அணிகலன் தங்கத்தைவிட தரம் உயர்ந்த ரத்தினங்களால் ஆனதாகும் இந்த ரத்தினங்களை தங்க கம்பிகளால் இணைத்து செய்யப்பட்டது இந்த அணிகலன். அரச குடும்பத்தினராலும், அரசனுக்கு நிகரான அதிகாரிகளாலும், பெருஞ் செல்வந்தர்களாலும் ஒரு காலத்தில் அணியப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உரிய அணிகலனாகும். மறவர்(அகதா) இனக் குழுவில் மணியக்காரர் என்னும் பிரிவினர் இந்த அணிகலன்களை அணியும் மரபை பின்பற்றி இருக்கிறார்கள்.
இந்த அணிகலன் முறை தற்போது முழுவதும் மறைந்து விட்டது விருதுநகர் மாவட்டம் வாடியூர் அரச குடும்பத்தினரிடம் மட்டுமே இந்த அணிகலன்கள் புழக்கத்தில் உள்ளன.ரத்தினம் மற்றும் உருத்திராக்கமும் பயன்பட்டு உள்ளது.