கவுதம் தாஸ்

வங்கதேச பத்திரிக்கையாளர்

கவுதம் தாஸ் (Gautam Das சிஏ 1978 – நவம்பர் 17, 2005) ஒரு வங்காளதேச அச்சு பத்திரிகையாளர் மற்றும் வங்காளதேசத்தின் டாக்கா மாகாணத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தார். இவர் இவரின் அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.[1] பலரது ஊழலை இவர் அம்பலப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டதன் மூலம் தாஸ் பரவலாக அறியப்பட்டர். மேலும் அந்தப் பகுதி முழுவதும் பரவலாக அவருக்கு நற்பெயர் இருந்தது

தனிநபர் தொகு

இறக்கும் போது இவருக்கு 33 வயது ஆகும்.[1] தாஸின் மனைவி தீபாலி தாஸ் ஆவார்.[2] கவுதம் தாஸ் பங்களாதேஷின் ஃபரித்பூரில் உள்ள பங்கா உபசிலாவின் சண்டிதாஷி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது மரணத்தின் 9 வது ஆண்டு நினைவு நாளில், பத்திரிகையாளர் கவுதம் தாஸ் நினைவு குழுமம், ஃபரித்பூர் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் சமகல் சூரித் சமபேஷ் ஆகியோர் அவரின் நினைவு நாளை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தொழில் தொகு

பலரது ஊழலை இவர் அம்பலப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டதன் மூலம் தாஸ் பரவலாக அறியப்பட்டர். மேலும் அந்தப் பகுதி முழுவதும் பரவலாக அவருக்கு நற்பெயர் இருந்தது. அவர் டைனிக் சமகலின் ஃபரித்பூர் பணியகத் தலைவராக இருந்தார்.[3] மேலும் அச்சு ஊடகங்களுக்கான பத்திரிகையாளராக இருந்தார்.[4] கொலை செய்யப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் வரை இவர் டாக்காவை தளமாகக் கொண்ட சமகலுக்காக தாஸ் தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இந்த அறிக்கைகள் பங்களாதேஷ் தேசியவாத கட்சி அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைளையும் ஊழலை தெரிவிக்கும் வண்னம் அமைந்திருந்தது..[2][5] மேலும் அசோசியேட்டட் பிரெசு கட்டுமான ஒப்பந்த விருதுகள் பெறுவதற்கு லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட உள்ளூர் அரசாங்க அதிகாரிகளைப் பற்றி தாஸ் எழுதியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இறப்பு தொகு

கவுதம் தாஸ் நவம்பர் 17, 2005 அன்று அவரது அலுவலகத்தில் கொல்லப்பட்டார்.[3] அவரது அலுவலகத்தில் அவர் கழுத்தை நெரித்தது மற்றும் அவரது கை, கால்கள் எலும்பு முறிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.[6] டாக்காவில் ஊடகவியலாளர்கள் தலைவர்கள் தாஸ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, கொலையாளிகளைக் கைது செய்ய அரசாங்கத்திற்கு மூன்று நாள் இறுதி எச்சரிக்கையும் அளித்தனர். நவம்பர் 19, 2005 அன்று, தம்ஜித் ஹொசைன் பாபுவை (35) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பாபு முன்னாள் பங்களாதேஷ் அவாமி லீக் சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவர் தனது இல்லத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் ஒப்படைத்தபோது ஏழு நாட்கள் அவரை பிணையில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஜூன் 27, 2013 அன்று கவுதம் தாஸைக் கொன்றதாக ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.[5] டாக்கா நீதிமன்றம் ஆசிப் இம்ரான், ஆசிப் இம்தியாஸ் புலு, ஜாஹித் கான், கம்ருல் இஸ்லாம் அப்பான், ஆசாத் பின் கதிர், சித்திகுர் ரஹ்மான் மியா, தம்ஜித் ஹொசைன் பாபு, ராஜீப் ஹசன் மியா, அபு தாஹர் முகமது மோர்டூசா அஹ்சன் (அப்பல்லோ பிஸ்வாஸ்) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.[7][8] இந்த ஒன்பது குற்றவாளிகளில், எட்டு பேர் எதிர்க்கட்சி பங்களாதேஷ் தேசியவாத கட்சியைச் சேர்ந்த இளம் அரசியல்வாதிகள் ஆவர்.

ஃபரித்பூர் முஜிப் சாலை பழுதுபார்க்கும் பணிகளில் ஊழல் செய்தனதனை செய்தித்தாளில் வெளியிட்டதற்காக அவர்கள் கவுதம் தாஸைக் கொன்றது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.[7]

எதிர்வினைகள் தொகு

தாஸ் கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷ் நாட்டைச் சுற்றியுள்ள பத்திரிகையாளர் குழுக்கள் இந்தக் கொலையை எதிர்த்ததுடன், இதுபோன்ற செயல்களிலிருந்து பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த முயற்சியும் செய்யாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.[2]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Journalist Gautam Das 9th death anniversary". risingbd.com. November 17, 2013. http://www.risingbd.com/english/Journalist_Gautam_Das_9th_death_anniversary/9642. 
  2. 2.0 2.1 2.2 "Gautam Das - Journalists Killed". Committee to Protect Journalists. November 17, 2005.
  3. 3.0 3.1 "BANGLADESH: One suspect held in Gautam murder". UCLA.
  4. "Gautam Das - The Journalists' Memorial". thejournalistsmemorial.rsf.org (in ஆங்கிலம்). Archived from the original on 2017-04-18. பார்க்கப்பட்ட நாள் 2017-04-17.
  5. 5.0 5.1 "Historic judgment for Gautam Das murder in Bangladesh -". Committee to Protect Journalists.
  6. "Director-General condemns assassination of Bangladeshi journalist Gautam Das".
  7. 7.0 7.1 "9 get life term for killing journo Gautam". http://www.thedailystar.net/news/9-get-life-term. 
  8. "Bangladesh". Freedom House. Archived from the original on 2017-06-01. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுதம்_தாஸ்&oldid=3548508" இலிருந்து மீள்விக்கப்பட்டது