கவுந்தப்பாடி செந்தாம்பாளையம் காந்தி கோவில்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடிக்கு அருகேயுள்ள செந்தாம்பாளையம் கிராமத்தில் மகாத்மா காந்திக்குக் கோ‌யில் உள்ளது. இந்தக் கோ‌யிலில் மகாத்மா காந்திக்கும் அவரது மனைவி கஸ்தூரிபாய்க்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோ‌யிலில் காந்தி ஜெயந்தி அன்று சிறப்பு பூசைகள் செய்யப்படும். பொதுமக்கள் கோ‌யிலின் அருகில் உள்ள வாணி ஆற்றிற்குச் சென்று நீர் சுமந்து வந்து மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபாய் ஆகியோரின் சிலைகளுக்கு குடமுழுக்கு செய்வர். பெண்கள் கோ‌விலுக்கு முன் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். மாவிளக்கு ஊர்வலமும் நடத்தப்படுகிறது.