கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா
கத்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்பது இந்திய அரசால் ஆகத்து 2004-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கல்வித் திட்டத்தி்ன் கீழ் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டமாகும். இத்திட்டமானது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பின்தங்கிய வகுப்பினர். சிறுபான்மையினர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சாா்ந்த பெண் குழந்தைகளுக்குக் கல்வி அறிவு வழங்குவதற்காக கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் தொடங்கப்பட்டது.[1]
குறிக்கோள்கள்
தொகுகிராமப்புறங்களில், குறிப்பாக, பின்தங்கிய சமூகங்களில் பாலினப் பாகுபாடுகள் நிறைந்துள்ள நிலையில், தொடக்க நிலை, உயர்தொடக்கநிலைகளில் பெண் குழந்தைகளி்ன் கல்வி அறிவு மாணவர்ளை விட பின்தங்கியுள்ளது. எனவே தரமான கல்வியைப் பின்தங்கிய பகுதியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதோடு, அதைச் சாத்தியமானதாக ஆக்குவதற்காக உண்டு உறைவிடப் பள்ளியாகத் தொடக்கநிலையில் செயல்படுத்தப்படுகிறது.[1]
தகுதிகள்
தொகு2004-ஆம் ஆண்டு பள்ளிகள் தொடங்குவதற்கான தகுதியுள்ள் பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
- கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் தொடங்கப்படுதல்
- கிராமப்புறப் பகுதிகளில் பெண்குழந்தைகளின் எழுத்தறிவு நிலை குறைந்துள்ள இடங்கள்.
- ஆண் பெண் எழுத்தறிவு நிலையில் வேறுபாடு நிறைந்துள்ள பகுதி.
- பழங்குழயினர், தாழ்த்தப்பட்டவர், பிற பின்தங்கிய வகுப்பினர் நிறைந்திருக்கும் பகுதி.
- பள்ளி செல்லாத பெண் குழந்தைகள் நிறைந்துள்ள பகுதி.
- முறையான பள்ளிகள் தொடங்கப்பட முடியாத நிலையில் உள்ள சிறு, சிறு பகுதிகள்.
2008-ஏப்ரல் 1 முதல் வரையறுக்கப்பட்டுள்ள தகுதியுடைய பகுதிகள்:
- 2001- தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புற பெண் எழுத்தறிவு விகிதம் 30 விழுக்காட்டிற்கு குறைவாக உள்ள 316 வட்டாரங்கள்.
- 2001- தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பெண்கள் எழுத்தறிவு விகிதம் 53.67 விழுக்காட்டிற்கு குறைவாக உள்ள சிறுபான்மையினர் நிறைந்துள்ள 94 நகர்ப்புற மற்றும் மாநகரப் பகுதிகள்.
மையங்கள்
தொகுஅசாம், ஆந்திரபிரதேசம், தெலுங்கான, அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீசுகர், குஜராத், ஆரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மஹாராட்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், இராசத்தான், தமிழ்நாடு, திாிபுரா, உத்திரப்பிரதேசம், உத்ரகாண்ட், மேற்குவங்கம், டெல்லி, தத்ர-நாகர்காவேலி முதலான 28 மாநிலங்களிலும் ஒன்றியப் பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.[2]
இந்திய அரசால் 20578 கத்தூாிபா காந்தி பாலிகா வித்யாலயா மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.[3] இவற்றில் 427 மையங்கள் முசுலீம் சமயத்தவர் நிறைந்துள்ள பகுதிகளிலும், 612 மையங்கள் பழங்குடியினத்தவர் நிறைந்துள்ள பகுதிகளிலும், 688 மையங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் நிறைந்துள்ள பகுதிகளிலும் தாெடங்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் 750 மையங்கள் உண்டு உறைவிடப் பள்ளிகளாகத் தொடங்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் சேர்வதற்குத் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் பிற பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு 75 விழுக்காடும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு 25 விழுக்காடும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Revised Guidelines for Implementation of Kasturba Gandhi Balika Vidyalaya (KGBVs)". Archived from the original on 2012-04-19. பார்க்கப்பட்ட நாள் 2017-06-13.
- ↑ Kasturba Gandhi Balika Vidhayalaya (KGBV) Scheme detail
- ↑ 2013