காகபுருடர் காவியம்
காகபுருடர் காவியம் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காகபுருடர் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் காப்புச்செய்யுள் ஒன்றும், 33 நூல் செய்யுள்களும் எண்சீர்விருத்தங்களாக உள்ளன.
அவற்றுள் சில பகுதிகள்:
- 1
கேளப்பா சிவமோடி அண்டம் பாயும்
- கிருபையாய் அண்டமது திரும்பிப் பாயும் - 23
- 2
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்
- திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும் - 9
- 3
தண்ணிதண்ணி என்றலைந்தால் தாகம் போமோ
- சாத்திரத்தி லேபுரட்டித் தள்ளி ஏறே - 1
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
- சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987