காகபுருடர் குறள்
காகபுருடர் குறள் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காகபுருடர் என்பவரால் இயற்றப்பட்ட சிறு நூல். இதில் 16 குறள் வெண்பாக்கள் மட்டுமே உள்ளன. இதில் சிவராச யோகம், வாசிமுனி மைந்தன் முதலான செய்திகள் உள்ளன.
இது குறள் யாப்பு நூல்கள் சிலவற்றில் ஒன்று. இதன் குறள்கள் - எடுத்துக்காட்டு
- சின்மயத்தைப் போற்றிச் இவராய யோகத்தில்
- நன்மை பராபரத்தை நாடு. 1
- கண்ணுள் மணியாகிக் காரண மாய்நின்றான்
- மன்னும் உயிர்ப்பதியு மாறு. 8
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
- சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987