காக்கா குஞ்சு (விளையாட்டு)

மரத்தில் ஏறிச் சிறுவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு

காக்கா குஞ்சு மரத்தில் ஏறிச் சிறுவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.

எளிதில் ஏறக்கூடிய ஆலமரம்

ஆடும் முறை

தொகு

பட்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார். எளிதாக ஏறக்கூடிய மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் அடிமரத்தைச் சுற்றி ஒரு வட்டம் போடுவர். எல்லாரும் மரத்தில் ஏறிக்கொள்வர். பட்டவர் குச்சி ஒன்றை அந்த வட்டத்துக்குள் வைத்துவிட்டு மரத்தில் ஏறி ஒருவரைத் தொடவேண்டும். தொட்டுவிட்டால் தொடப்பட்டவர் பட்டவர் ஆகி அவ்வாறே குச்சியை வைத்துவிட்டுத் தொடவேண்டும்.

ஒருவரைத் தொடும் நோக்கில் பட்டவர் ஒரு கிளையில் ஏறும்போது வேறு கிளையில் உள்ள மற்றொருவர் கீழே இறங்கிவந்து மரத்தடியில் உள்ள குச்சியை எடுத்துத் தொலைதூரத்துக்கு வீசிவிட்டு மரத்தில் ஏறிக்கொள்வார். குச்சி வட்டத்துக்குள் இருக்கும்போது தொட்டால்தான் தொடப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும். ஆட்டம் தொடங்கிய பின்னர் மரத்தில் ஏறித் தொட்டாலும், கீழே நிற்கும்போது தொட்டாலும் தொட்டதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

தொடக்கத்தில் எல்லாரும் மரத்தில் ஏறியிருப்பதால் இந்த விளையாட்டைக் காக்கா குஞ்சு என்கின்றனர்.

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாடுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980