காங்கேயன் (புலவர்)
காங்கேயன் என்பவன் ஒரு புலவன். இவன் கொங்கு மண்டலத்தில் உள்ள மோரூரில் [1] வாழ்ந்தவன். கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். உலகில் செந்தமிழ் ஆய்பவர்கள் நன்மை அடையும் தக்கதோர் வகையில் உரிச்சொல் நிகண்டு என்னும் நூலை இயற்றினான். இதனைக் கொங்கு மண்டல சதகம் 91-ஆம் பாடல் தெரிவிக்கிறது.[2][3]
மேற்கோள்
தொகு- ↑ "கொங்கு நாட்டு மோரூர்". Archived from the original on 2018-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
- ↑ இதனைத் தெரிவிக்கும் பாடல்:
அலைகடல் சூழும் அவனியில் செந்தமிழ் ஆய்பவர்கள்
நலனுறத் தக்க வகையாக உள்ள நனி மகிழ்ந்தே
இலகும் உரிச்சொல் நிகண்டு வெண்பாவில் இசைத்த கலை
வலவ எழில் காங்கேயன் வாழுமோரூர் கொங்கு மண்டலமே. 91 - ↑ கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை (கொங்குமண்டல வரலாறு)