காசவளநாடு கோவிலூர் ஜம்புகேஸ்வரர் கோயில்
காசவளநாடு கோவிலூர் ஜம்புகேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுதஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூரிலிருந்து மேற்கே 7 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.
இறைவன், இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் ஜம்புகேஸ்வரர், இறைவி அகிலாண்டேஸ்வரி.[1]
இறைவி
தொகுஇங்குள்ள இறைவி மேல் இரு கரங்களில் மழுவையும் அக்கமர்லையும் கொண்டுள்ளார். கீழிரு கரங்கள் அபய, வரத முத்திரையோட உள்ளன. இறைவியின் நீர்த்திரளாக எடுத்து வழிபட்ட லிங்கமே இத்தலத்து மூலவர் ஆவார்.[1]
கல்வெட்டு
தொகுதெற்கு திருச்சுற்றில் காணப்படுகின்ற தல மரமான பலா மரத்தின் அருகே உள்ள தூணில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு காணப்படுகிறது.அதில் இறைவன் பெயர் திருவானைக்கா உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]