காசா ட இந்தியா

காசா ட இந்தியா (Casa da Índia, இந்திய மாளிகை) பதினாறாவது நூற்றாண்டில் போர்த்துக்கேய பேரரசு பரந்திருந்தபோது அதன் வெளிநாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வதற்கான ஓர் போர்த்துக்கேய அமைப்பாகும். வெளிநாட்டு வணிகத்தின் அனைத்துக் கூறுகளையும் கட்டுபடுத்தும் மைய அதிகாரமாகவும் மைய ஏற்றுமதி இறக்குமதி அமைப்பாகவும் விளங்கியது. பொருளியல் கணி்ப்பில் இது ஓர் தொழிற்கூடமாக (feitoria) விளங்கியது.[1] தன்காலத்தில் போர்த்துகல்லின் முதன்மையான பொருளியல் நிறுவனமாக இருந்தது. இது லிசுபனில் உள்ள டெர்ரீரோ டோ பாசோ (தற்போதைய பிராசா டோ கொமர்சியோ) சதுக்கத்தில் அமைந்துள்ள ரிபீரா அரண்மனையில் இயங்கியது.

காசா ட இந்தியா
Casa da Índia
நிலைகலைக்கபட்டது
முந்தியதுகினி கம்பனி
நிறுவுகை1434
செயலற்றதுசெப்டம்பர் 17, 1833 (1833-09-17)
தலைமையகம்லிஸ்பன், போர்த்துகல் பேரரசு
சேவை வழங்கும் பகுதிபோர்த்துகல் பேரரசு
முதன்மை நபர்கள்போர்த்துக்கல்லின் முதலாம் மானுவல்
தொழில்துறைபன்னாட்டு வணிகம்

மேற்கோள்கள் தொகு

  1. It was the Portuguese counterpart of the Spanish organization Casa de Contratación (est. 1503, abolished 1790).
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசா_ட_இந்தியா&oldid=2927997" இலிருந்து மீள்விக்கப்பட்டது