காசித் துண்டி விநாயகர் பதிகம்

காசித் துண்டி விநாயகர் பதிகம் [1] என்னும் நூல் பத்து ஆசிரியப் பாக்களால் ஆனது. இந்த நூல் குமரகுருபரர் இயற்றிய நூல் என்று திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை குறிப்பிடுகிறார். இந்தச் சுந்தரம்பிள்ளையின் மாணாக்கர் உ. வே. சாமிநாதையர். இந்தச் சாமிநாதையர் பதிப்பித்த குமரகுருபரர் பிரபந்தங்கள் தொகுப்பில் [2] இந்த நூல் இடம்பெறவில்லை. இது வடமோழிக் கலப்பு மிக்கது எனக் கா. சு. பிள்ளை குளிப்பிடுகிறார். இது மீனாட்சி சுந்தரம்பிள்ளை முதன்முதலில் பாடிய நூலாக இருத்தல் வேண்டும் என்பது மு. அருணாசலம் கருத்து.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 122. 
  2. குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,.