காசிராம் வெசன் பவாரா
காசிராம் வெச்சன் பவாரா (Kashiram Vechan Pawara) இந்தியாவின் 13 வது மகாராட்டிர மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராவார். சிர்ப்பூர் சட்டமன்றத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[1][2] 2009 ஆம் ஆண்டிலும் பவாரா சிர்ப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 2019 தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[3]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகாசிராம் மகாராட்டிராவின் துளே மாவட்டத்தில் உள்ள சுலே கங்கை கிராமத்தைச் சேர்ந்தவராவார். ஒருமுறை கங்கை கிராமத்திற்குச் சென்றபோது காசிராம் தனது வளர்ச்சித் திட்டம் பற்றிய உரையைத் தொடங்கினார். "அரசியல் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வதற்காக நான் எனது ஐந்து வருடங்களை வீணடித்தேன். இப்போது இந்த முறை உங்கள் மதிப்புமிக்க வளர்ச்சிக்காக எனக்கு வாக்களிக்கவும்" என்று அப்போது பேசினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Advantage BJP As Four More Opposition Leaders Cross Over In Maharashtra
- ↑ "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 3 November 2014.
- ↑ "Statistical Report on General Election 2009, to the Legislative Assembly of Maharashtra" (PDF). Election Commission of India. p. 6. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.