காசி காண்டம்

காசி காண்டம்

காசி காண்டம் (காசி காண்டம்) தமிழ் புலவர்களில் ஒருவராகிய அதிவீரராம பாண்டியர் என்பவரால் இயற்றப்பட்ட நூல்களுள் ஒன்று. வடமொழி நூலான சங்கரசங்கிதையில் இருந்து இதற்குரிய பொருள் எடுத்தாளப்பட்டுள்ளது. சங்கிரசங்கிதையின் நான்காம்பகுதி காசிக்காண்டம். இது நாற்பத்தொரு பகுதிகளைக் கொண்ட பூர்வ காண்டம், ஐம்பத்தொன்பது பகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டம் என்ற இரு காண்டங்களைக் கொண்டுள்ளது. இது 2526 விருத்தப்பாக்களால் ஆனது. இப்புராணம் காசிநகரப் பெருமையைக் கூறுவதோடு பிரமச்சரியம், இல்வாழ்க்கை, மகளிர் பண்பு, வாழ்வொழுங்கு, காலக்கோட்பாடு அறிதல், மறுமையில் பெறும் பேறுகள் என்பன பற்றிக் கூறுகின்றது. இதன் ஆசிரியர் வடமொழிக் கருத்தை தமிழில் தந்துள்ளதால் ஆசிரியரின் தனித்தன்மை, கருத்தாற்றல், கற்பனைத்திறன் என்பன வெளிப்படவில்லை.

இவற்றையும் காண்க

தொகு


வெளி இணைப்புகள்

தொகு

காசி காண்டம் நூல் [1] காசி காண்டம் ஓலைச்சுவடி [2]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_காண்டம்&oldid=3400044" இலிருந்து மீள்விக்கப்பட்டது