காசுமோகுளோர்
காசுமோகுளோர் (Kosmochlor) என்பது NaCr3+Si2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். குரோமியம் சோடியம் கிளினோபைராக்சீன் வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.
காசுமோகுளோர் Kosmochlor | |
---|---|
குரோமைட்டு (உலோகக் கருப்பு), காசுமோகுளோர் பைராக்சீன் (மரகதப் பச்சை முதல் அடர் பச்சை வரை), குரோமியன் இஏடைட்டு பைராக்சீன் (பச்சை), குரோமிபெரசு ஆர்ஃப்வெட்சோனைட்டு ஆம்பிபோல் (பச்சை அல்லது சாம்பல்), சிம்ப்ளெக்டைட்டு (பச்சை, பெரும்பாலும் குரோமியன் இயேடின் மெல்லிய-படிக கனிம கலவை) | |
பொதுவானாவை | |
வகை | இனோசிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | NaCr3+Si2O67 |
இனங்காணல் | |
நிறம் | மாணிக்கப் பச்சை |
படிக இயல்பு | பட்டகப் படிகங்கள் மற்ரும் இழை திரட்சிகள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
இரட்டைப் படிகமுறல் | எளிமை, {100} மற்றும் {001} இல் அடுக்கு |
பிளப்பு | சரிபிளவு {110} இல் {001} இல் பிளவு |
மோவின் அளவுகோல் வலிமை | 6 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | இளம்பச்சை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 3.51-3.60 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.766 nγ = 1.781 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.015 |
பலதிசை வண்ணப்படிகமை | X = மஞ்சள் கலந்த பச்சை; Y = நீலப்பச்சை, புல் பச்சை; Z = மாணிக்கப் பச்சை |
நிறப்பிரிகை | r > v |
மேற்கோள்கள் | [1][2][3] |
விண்கற்களில் தோன்றியதற்காக செருமனியின் காசுமிசு என்ற சொல்லிலிருந்து , இதன் பச்சை நிறத்திற்காக கிரேக்க சொல்லான குளோர் என்ற பெயரிலிருந்தும் காசுமோகுளோர் என்ற பெயர் வந்தது. முதன்முதலில் மெக்சிகோ நாட்டின் இயிக்குபில்கோ நகராட்சியில் 1897 ஆம் ஆண்டு தோலுகா விண்கல்லில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டது.[1]
சில இயேடிடைட்டு எனப்படும் உருமாறிய பாறைகளின் முக்கிய அங்கமாகவும் சில இரும்பு விண்கற்களின் துணைக் கனிமமாகவும் காசுமோகுளோர் தோன்றுகிறது. கிளிஃப்டோனைட்டு (கிராஃபைட்), குரோமியன் டயோப்சைட்டு, தோலுகாவில் உள்ள திரொலைட்டு; தௌப்ரீலைட்டு, கிரினோவைட்டு, உரோயிட்டெரைட்டு, இரிச்டெரைட்டு, குரோமைட்டு மற்றும் இயேடைட்டு, குளோரைட்டு (பர்மா) ஆகிய தனிமங்களுடன் சேர்ந்து காசுமோகுளோர் காணப்படுகிறது.[2]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் காசுமோகுளோர் கனிமத்தை Kos[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kosmochlor on Mindat
- ↑ 2.0 2.1 Kosmochlor in the Handbook of Mineralogy
- ↑ Kosmochlor on Webmin
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.