காஞ்சிரமட்டம் மகாதேவர் கோயில்
காஞ்சிரமட்டம் மகாதேவர் கோயில், இந்தியாவில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா வட்டம் காஞ்சிரமட்டம் கராவில் தொடுபுழா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும். [1] தொடுபுழா KSRTC பேருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இது கேரளாவின் 108 சிவன் கோயில்களில் ஒன்றாகும். இது சிவபெருமானுக்காக பரசுராம முனிவரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
துணைத்தெய்வங்கள்
தொகுமூலவர் சிவன், பார்வதியுடன் கல்ப விருட்சத்தின் கீழ் தியானம் செய்யும் கோலத்தில் உள்ளார். இக்கோயில் கேரள கட்டிடக்கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. துர்க்கை, அமிர்தகலச சாஸ்தா, கணபதி, வனதுர்க்கை, நாக தெய்வங்கள், மூகாம்பிகா தேவி, ராட்சஸ் ஆகிய துணைத்தெய்வங்கள் இக்கோயிலில் உள்ளன.