காஞ்சி அணி

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒட்டியாணம். இடையில் உடுத்தியிருக்கும் ஆடை எந்த நிலையிலும் நழுவாமல் இருக்க இந்தக் காஞ்சியை அணிந்துகொள்வார்கள். ஆண்கள் இடையில் கச்சம் என்னும் இடுப்புவார் அணிந்துகொள்வது போலப் பெண்கள் காஞ்சி அணிந்துகொள்வர்.

இடையில் அணியும் ஆடை கலை. கலையின் மேல் அணிந்துகொள்ளும் ஆடை மேகலை. நடனம் ஆடும் மகளிர் அணிவது மேகலை. நடனமாடும் மகளிர் மட்டுமல்லாமல் தன்னை ஒப்பனை செய்துகொள்ளும் மணப்பெண் போன்றவர்கள் தன் இடுப்பிலுள்ள ஆடையின் மேல் அணிந்துகொள்வது காஞ்சி. இக்காலத்தில் தங்க ஒட்டியாணமாக இது உள்ளது.

இலக்கியங்களில் காஞ்சிதொகு

பரிபாடல்தொகு

மேகலை, காஞ்சி, வாகுவளையம் – ஆகியவை மகளிர் இடையில் அணியும் அணிகலன்கள்.[1]

கலிங்கத்துப்பரணிதொகு

கலிங்கத்துப் பரணி என்னும் நூல் இந்த அணியைக் குறிப்பிடுகிறது:

ஒரு பெண் தன் கணவன் வீடு திரும்பியதும் கதவைத் திறக்கச் சென்றாளாம். கணவனைத் தழுவிக்கொள்ளும் ஆசையால் அவளது இடையிலுள்ள ஆடை நழுவுகிறதாம். செருகிய ஆடை நழுவலாம். சேர்த்துக்கட்டிய ஒட்டியாணம் நழுவுமா? எனவே காஞ்சி இருக்கக் கலிங்கம் குரைந்தது. வாலை ஆட்டும் நாயின் வால் குலைவது போலக் கலிங்கம் குலைந்தது எனப் பாடியுள்ளார் செய்ங்கொண்ட வல்லபர்.[2]

அடிக்குறிப்புதொகு

  1. பரிபாடல் 7-47
  2. காஞ்சி யிருக்கக் கலிங்கங் குலைந்த கலவி மடவீர் கழற்சென்னி
    காஞ்சி யிருக்கக் கலிங்கங் குலைந்த களப்போர் பாடத் திறமினோ. (பாடல் 63)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சி_அணி&oldid=957197" இருந்து மீள்விக்கப்பட்டது