காடா ஏமர்

எகிப்திய அமெரிக்க கலைஞர் (பிறப்பு 1963)

காடா ஏமர் (Ghada Amer 1963) நியூயார்க்கு நகரில் வாழும் பெண் ஓவியர் ஆவார். தமது 11 ஆம் அகவையில் எகிப்திலிருந்து பிரான்சுக்குக் குடியேறினார். பாரிசிலும் நைசிலும் கல்வி கற்றார். ஆண் பெண் மற்றும் பாலியல் சார்ந்த ஓவியங்களை வரைந்து வருகிறார்.[1]

படைப்புகள்

தொகு

எகிப்து நாட்டில் கைரோவில் பிறந்த காடா ஏமர் இசுலாமியர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய ஆக்கங்கள் புடைப்பு ஓவியங்களாகவும் பூத்தையல் அல்லது பூப்பின்னல் கொண்டதாகவும் உள்ளன.[2][3] பெண்ணியம், காமம், உடலுறவு, இசுலாமிய நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை விவரிப்பதாக அமைந்துள்ளன. பாலியலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை, சம பங்கேற்பு உண்டு என்பது இவருடைய ஓவியங்களின் முகாமையான கருத்தாக நிலவுகிறது. இவருடைய ஓவியப் படைப்புகள் வெனிசு கலைக் கண்காட்சிக்கூடம், சிட்னி கலைக் கண்காட்சிக்கூடம், விட்னி கலைக் கண்காட்சிக்கூடம், புரூக்லின் அருங்காட்சியகம் ஆகியவற்றில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பெற்ற சிறப்பு

தொகு

1999 இல் நடந்த வெனிசு கலைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட படைப்புகளைப் பாராட்டி உனெசுகோ பரிசு ஏமருக்கு அளிக்கப்பட்டது.[4]

மேற்கோள்

தொகு
  1. "About". Ghada Amer. www.ghadaamer.com [artist's website]. Archived from the original on 2016-10-02. பார்க்கப்பட்ட நாள் 2016-10-04.
  2. "Ghada Amer: Defusing the power of erotic images". New York Times Arts Review. 12 March 2007. https://www.nytimes.com/2007/03/12/arts/12iht-jessop.4882064.html?_r=0. பார்த்த நாள்: 1 February 2014. 
  3. Posner, Helaine (2013). "Bad Girls: Ghada Amer". In Heartney, Eleanor (ed.). The Reckoning: Women Artists of the New Millennium. New York: Prestel. pp. 24–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7913-4759-2.
  4. Winegar, Jessica (2004). Mattar, Philip (ed.). Encyclopedia of the Modern Middle East and North Africa. Vol. 1 (2nd ed.). New York: Macmillan Reference USA. p. 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0028657691.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடா_ஏமர்&oldid=3581523" இலிருந்து மீள்விக்கப்பட்டது