காடு (நடனம்)

காடு நடனம் (Ghatu) என்பது மேற்கு நேபாளத்தின் குருங் சமூகத்தின் நேபாள நாட்டுப்புற நடனமாகும். [1] இந்த நடனம் முக்கியமாக புத்த பூர்ணிமா திருவிழாவின் போது நிகழ்த்தப்படுகிறது. அதே மாதத்தின் முந்தைய அமாவாசை நாளில் நடனம் தொடங்கப்படுகிறது. வசந்த பஞ்சமி தினத்தன்று நடனக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று அல்லது நான்கு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுவார்கள். [2] குருங் சமூகத்துடன், இந்த நடனம் மகர், துரா, பாலாமி மற்றும் குமால் சமூகத்தினராலும் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது.

காடு (நடனம்)
2019, நியூயார்க்கில் நடைபெற்ற எவரெஸ்ட் தின விழாவில் "காடு" நடனம் ஆடும் பெண்கள்
பூர்வீக பெயர்घाटु नाच
வகைநேபாளி நாட்டுப்புற நடனம்
கண்டுபிடிப்பாளர்குருங் சமூகம்
தோற்றம்மேற்கு நேபாளம்

செயல்திறன்

தொகு

காடு நடன நிகழ்ச்சியில், ராஜா பாஷ்ரமு மற்றும் ராணி யம்பவதி என்கிற சாம்பவதி கதை சொல்லப்படுகிறது. இரண்டு முக்கிய காடு நடனக் கலைஞர்களில் ஒருவர் ராஜாவாகவும் மற்றவர் ராணியாகவும் நடிக்கிறார். அரசர் பாஷ்ரமு வேட்டையாடச் செல்கிறார், அங்கு அவர் யம்பவதியைச் சந்திக்கிறார். அவர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. மன்னன் பஷ்ரமு ஒரு போருக்குச் செல்கிறான், அங்கே அவன் இறக்கிறான். ராணி பின்னர் உடன்கட்டை ஏறி தனது கணவருடன் தீக்குளிக்க முடிவு செய்கிறாள். இந்தக் காட்சியை நடனத்தின் மூலமாக வெளிப்படுத்தும்போது நடனக் கலைஞர்கள் மயக்க நிலையில் செல்கிறார்கள். [3] இரண்டு வகையான காடு நடனங்கள் உள்ளன. அவை, பஹ்ரமேஸ் மற்றும் சதி என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

பஹ்ரமேஸ் நடனம்

தொகு

பஹ்ரமேஸ் காடு நடனம், ஆண்டு முழுவதும் நிகழ்த்தப்படலாம் என்று அறியப்படுகிறது. மேலும், விவசாயம் மற்றும் வீட்டு வேலைகள் போன்ற மக்களின் அன்றாட நடவடிக்கைகள் இந்த வகை நடனத்தில் வழங்கப்படுகின்றன.

சதி நடனம்

தொகு

வசந்த பஞ்சமி (டிசம்பர்/ஜனவரி) முதல் புத்த பூர்ணிமா (ஏப்ரல்/மே) வரை மட்டுமே சதி நடனம் செய்ய முடியும். சதி நடனத்தில், ராஜா மற்றும் ராணியின் முக்கிய கதை வழங்கப்படுகிறது. இந்த நடனத்தின் போது, நடனக் கலைஞர்கள் ஒரு மயக்க நிலையில் செல்கிறார்கள். இது, இவர்கள் வணங்கும் கடவுளால் ஆட்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது. நடனக் கலைஞர்கள் பொதுவாக, மெதுவான உடல் அசைவில் நடனமாடுகிறார்கள். [4]

 
தமு லோசர் (குருங் புத்தாண்டு) கொண்டாட்டத்தில் காடு நடனம் (2018)

ஆடை மற்றும் அணிகலன்கள்

தொகு

நடனக் கலைஞர்கள் குருங் கலாச்சார உடை மற்றும் நகைகளை அணிந்துள்ளனர். பூக்கள் மற்றும் வறுத்த நெல் ஆகியவற்றால் செய்யப்பட்ட கிரீடம் நடனக் கலைஞர்களால் அணியப்படுகிறது. ராஜாவுக்கு குதிரை, ராணிக்கு சீப்பு என பல்வேறு பொருட்கள் இந்த வகை நடனத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. வில் மற்றும் அம்பு ஒவ்வொரு ஆண்டும் மக்களால் புதியதாக தயாரிக்கப்படுகிறது, அவை நடனத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன.

சான்றுகள்

தொகு
  1. "वैशाख शुक्ल पूर्णिमा र घाटु नृत्य नाटिका Nepalpatra". nepalpatra.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  2. Bhattarai, Sewa. "Ghatu dance of Lamjung" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  3. Bhattarai, Sewa. "Ghatu dance of Lamjung" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.Bhattarai, Sewa. "Ghatu dance of Lamjung". Retrieved 2022-08-17.
  4. "लोप हुने अवस्थामा गुरुङ र घले समूदायमा प्रचलित घाटु नाच". BeniOnline.com.np जिल्लाका ताजा अनलाइन समाचार (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-19. Archived from the original on 2022-05-27. பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடு_(நடனம்)&oldid=3707191" இலிருந்து மீள்விக்கப்பட்டது