காடை வேட்டை

காடை வேட்டை (Quail hunting) என்பது ஒரு வேட்டை விளையாட்டு ஆகும். வடக்கு பாப்வெண்மை காடை துணையினங்கள் 21 உள்ளன. இவை அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கரிபியனைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தரையில் வாழும் பறவையாகும். இப்பகுதிகளில் கல்லிபார்மிசினை சேர்ந்த பறவைகள் விளையாட்டுப் பறவைகளாக வேட்டையாடப்படுகின்றன.

வரலாறு

தொகு

வட அமெரிக்காவில் உள்ள பழங்குடி மக்களின் தளங்களின் அகழ்வாராய்ச்சியின் தொல்பொருள் பதிவுகள் சில காடை எலும்புகளை வெளிப்படுத்துகின்றன. இவை ஆரம்பக்கால மக்கள் பெரிய விளையாட்டில் கவனம் செலுத்தியதைத் தெரிவிக்கின்றது. ஐரோப்பியக் குடியேறிகள் இப்பகுதிகளுக்கு வந்தபோது, காடை வேட்டை தீவிரமாகத் தொடங்கியது.[1]:18

நவீன வளர்ச்சிகள்

தொகு

காடைகள் அமெரிக்கா முழுவதும் வாழ்கின்றன. 20ஆம் நூற்றாண்டில் காடை வேட்டை மிகவும் பிரபலமான வேட்டை விளையாட்டாக இருந்தது.[2] விளையாட்டுப் பறவைகள் மற்றும் அவற்றின் பரவல் காரணமாக, காடைகள் வட அமெரிக்கக் கண்டம் முழுவதும், குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.[1]:20 1960களின் பிற்பகுதியிலிருந்து 1980களின் பிற்பகுதி வரையிலான இருபது ஆண்டுகளில், வேட்டையாடும் புள்ளிவிவரங்களால் அளவிடப்பட்ட காடைகளின் எண்ணிக்கை அதிக அளவில் காடையின் அழிவினைச் சுட்டிக்காட்டியது. நோய், வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல், வானிலை மாற்றம் மற்றும் பிற தாக்கங்கள் இவற்றின் அழிவிற்கான காரணங்களாக உள்ளன. அளவற்ற காடைகள் போன்ற அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும், 1981 பண்ணை சட்டத்தின் மூலமாகவும் இந்த அழிவுத் தடுக்கப்பட்டது. இதனால் காடைகளின் வாழ்விடம் அதிகரித்தது.[1]:24–26

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Huggler, Tom (1987). Quail Hunting in America: Tactics for Finding and Taking Bobwhite, Valley, Gambel, Mountain, Scaled, and Mearn's Quail by Season and Habitat. Stackpole Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786473656. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
  2. Roskelley, Fenton (23 December 1961), "Many Area Hunters Shy Clear of Quail Hunting", Spokane Daily Chronicle, p. 70, பார்க்கப்பட்ட நாள் 21 January 2016

நூல் பட்டியல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடை_வேட்டை&oldid=3742888" இலிருந்து மீள்விக்கப்பட்டது