காட்டேரி அருவி
தமிழ்நாட்டு அருவி
காட்டேரி அருவி (Katary Falls) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில் இருந்து ஏறக்குறைய 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு அருவியாகும். இந்த அருவி சுமார் 180 அடி உயரமானது. காட்டேரி அருவிதான் நீலகிரி மலையில் உள்ள மூன்றாவது உயரமான அருவியாகும். இந்த அருவியைக் காணவேண்டுமானால் நடந்துதான் செல்ல வேண்டும்.[1]
இந்த அருவி இந்தியாவின் முதல் நீர் மின் ஆற்றல் நிலையமான, காட்டேரி நீர்மின் அமைப்பின் தளத்தில் உள்ளது. [1]
மேலும்காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Coonoor in Tamil Nadu". visitindia.org.in.