காட்மோயிண்டைட்டு
காட்மோயிண்டைட்டு (Cadmoindite) என்பது CdIn2S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இதுவோர் அரிய காட்மியம் இண்டியம் சல்பைடு கனிமமாகும். சைபீரியாவில் குரில் தீவுகளில் உள்ள குத்ரியாவி எரிமலை, இட்ரூப் தீவில் உள்ள உயர் வெப்பநிலை (450-600 °C) எரிமலை பிளவுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. செக் குடியரசின் போகிமியாவில் உள்ள கேடெரினா நிலக்கரிச் சுரங்கத்திலும் இது கிடைக்கிறது.[2]
காட்மொயிண்டைட்டு Cadmoindite | |
---|---|
காட்மொயிண்டைட்டு, குத்ரியாவி எரிமலை, தூர கிழக்கு பிராந்தியம், உருசியக் கூட்டமைப்பு | |
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் தயோசிபைனல் குழு பல்வண்ணப் பளிங்குருவக் கட்டமைப்பு குழு |
வேதி வாய்பாடு | CdIn2S4 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 470.32 கி/மோல் |
நிறம் | கருப்பு முதல் அடர் பழுப்பு வரை |
படிக இயல்பு | நுண்ணிய எண்முகப் படிகங்கள் |
படிக அமைப்பு | கனசதுரம் |
முறிவு | சங்குப்புரி |
மிளிர்வு | வைர மிளிர்வு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒளியியல் பண்புகள் | சமத்திருப்பம் |
மேற்கோள்கள் | [1][2] |
CdIn2S4 பல்வண்ணப் பளிங்குருவக் கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது, இது 8 எண்முகங்களால் ஒருங்கிணைக்கப்பட்டும் 16 நான்முகிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நேர்மின் அயனி தளங்களைக் கொண்ட ஒரு கன அலகு செல் மூலம் விவரிக்கப்படுகிறது. நேர்மின் அயனித் தளங்களில் Cd(II) மற்றும் In(III) ஆகியவற்றின் விநியோகம் நிலையான எக்சு-கதிர் படிகவியல் ஆய்வு நுட்பங்களால் தெளிவுபடுத்துவது கடினம், ஏனெனில் இரண்டு இனங்களும் சம் எலக்ட்ரான் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. ஆனால் செயற்கை மாதிரிகளில் ராமன் நிறமாலை அளவீடுகள் மற்றும் அடர்த்தி செயல்பாட்டுக் கோட்பாடு உருவகப்படுத்துதல்கள் ஆகியவை இரண்டும் நான்முகத் தளங்களில் சுமார் 20% இண்டியம்(III) நேர்மின் அயனிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கின்றன.[3]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் காட்மோயிண்டைட்டு கனிமத்தை Cad[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cadmoindite Webmineral Data
- ↑ 2.0 2.1 Cadmoindite mineral information from Mindat.org
- ↑ Ursaki, V. V.; Manjon, F. J.; Tiginyanu, I. M.; Tezlevan, V. E. (2002). "Raman scattering study of pressure-induced phase transitions in MIn2S4 spinels". J. Phys.: Condens. Matter 14 (27): 6801. doi:10.1088/0953-8984/14/27/304.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.