காட்லீப் டைம்லர்
காட்லீப் டைம்லர் (மார்ச்சு 17, 1834 – மார்ச்சு 6, 1900) ஒரு செருமானியப் பொறியாளரும் கருவி வடிவமைப்பாளரும் ஆவார். இவர் தானுந்து, உள் எறி பொறிகளை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவர் ஆவார். இவர் அதிவேக பெட்ரோல் பொறியையும் முதன்முதலில் நான்கு சக்கர தானுந்தையும் உருவாக்கினார்.
காட்லீப் டைம்லர் | |
---|---|
காட்லீப் டைம்லர் | |
பிறப்பு | Schorndorf, Württemberg | மார்ச்சு 17, 1834
இறப்பு | மார்ச்சு 6, 1900 | (அகவை 65)
தேசியம் | செருமனி |
பணி | பொறியாளர், தொழிலதிபர், தானுந்து முன்னோடி |
அறியப்படுவது | Daimler-Motoren-Gesellschaft (Daimler Motors Corporation, DMG) |